ஆணையம்: குடும்பங்களுக்கு கடன் சுமை கூடி இருக்கிறது

ஆணையம்: குடும்பங்களுக்கு கடன் சுமை கூடி இருக்கிறது

3 mins read
f101c11b-6bbe-419a-985e-a5b735e995ab
-

சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு, கொவிட்-19 தொற்­று­வ­தற்கு முன் இருந்­த­தை­விட இப்­போது கடன் சுமை கூடி இருக்­கிறது.

சொத்­துச் சந்தை சுறு­சு­றுப்­பாக இருப்­பதே இதற்­கான கார­ணம். ஆகை­யால் அட­மா­னக் கடன்­களை அடைப்­ப­தற்கு எந்த அள­வுக்கு தம்­மால் முடி­யும் என்­பதை குடும்­பங்­கள் மிக­வும் கவ­ன­மா­கக் கணக்கிட வேண்­டும்.

ஏற்­கெ­னவே பெரும் கடன் சுமை­யில் உள்ள குடும்­பங்­கள் மேலும் கடன் வாங்­கக்கூடாது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் ஆலோ­சனை கூறி இருக்­கிறது. ஆணை­யம் நேற்று தனது வரு­டாந்திர நிதி நிலைப்­பாட்டு மறு­பரி­சீலனை அறிக்­கையை வெளி யிட்டது.

சிங்­கப்­பூ­ரின் தனி­யார் சொத்­துச் சந்தை சூடு­பி­டிக்­கிறது. இந்த ஆண்­டின் முதல் 10 மாதத்­தில் இடம்­பெற்ற புதிய தனி­யார் வீடு விற்­பனை 2018, 2019, 2020ஆம் ஆண்­டு­களில் நடந்த விற்­ப­னையை­விட அதி­கம் என்­பது நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றன.

கொவிட்-19 தொற்று சென்ற ஆண்­டின் முதல் காலாண்­டில் தலைகாட்டிய­தற்­குப் பிறகு தனியார் வீட்டு விலை 8.7 விழுக்­காடு கூடி இருக்­கிறது.

இது, பண­வீக்­கத்­திற்கு முந்தைய சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் ஏற்­பட்ட 5.3% வளர்ச்சியை­விட அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆகை­யால், மொத்த உள்­நாட்டு வரு­வா­யில் விகி­தாச்­சார அடிப்­படை­யில் பார்க்­கை­யில், குடும்­பங்­க­ளுக்­கான கடன்­ சுமை இந்த ஆண்­டின் மூன்­றா­வது காலாண்­டில் 70 விழுக்­கா­டாக உயர்ந்­தது.

இது ஓராண்டுக்கு முன் 67.1% ஆக இருந்­தது.

கணக்­கிட்டுப் பார்க்­கை­யில் குடும்­பத்­தின் கடன் கடந்த ஆண்டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டில் 6.8% கூடி இருக்­கிறது. அதற்­கேற்ப குடும்­பங்­க­ளின் கடன் அடைப்பு சுமை­களும் கூடி­யி­ருப்­பதாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்­தது.

பொரு­ளி­யல் அடுத்த ஆண்டு முழு­வ­தும் வள­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதே நேரத்­தில் தொற்று கார­ண­மாக தொடர்ந்து நிச்­ச­ய­மில்­லாத நிலை நில­வ­லாம் என்ற கணிப்­பும் இருக்­கிறது.

இந்த நிலை­யில், கடன் வாங்கு­வோ­ரும் கடன் கொடுப்­போ­ரும் தொடர்ந்து விவே­க­மாக நடந்­து­கொள்­ள­வேண்­டும்.

விழிப்­பு­டன் இருந்­து­கொள்ள வேண்­டும் என்று நாணய ஆணை­யம் ஆலோ­சனை கூறி­யது.

பெரிய அள­வில் புதி­தாக கடன் வாங்கி அதை அடைப்­பது தங்­களுக்குக் கட்­டுப்­ப­டி­யா­குமா என்­பதை குடும்­பங்­கள் மிக முக்­கி­ய­மாக பரி­சீ­லிக்க வேண்­டும்.

குறிப்­பாக வட்டி விகி­தம் படிப்­படி­யாக அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படும் சூழ­லில் குடும்­பங்­கள் விவே­க­மாக நடந்­து­கொள்ள வேண்­டும் என்று நாணய ஆணை­யம் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அதிக கடன் சுமை உள்ள குடும்­பங்­கள் மேலும் கடன் வாங்கக் கூடாது என்­றும் அந்த அறிக்கை ஆலோ­சனை கூறி உள்­ளது.

நாணய ஆணை­யம் வரு­டாந்­திர நிதி நிலைப்­பாட்டு மறு­ப­ரி­சீ­லனை அறிக்­கையை ஆண்­டு­தோ­றும் வெளி­யி­டு­கிறது.

சிங்­கப்­பூர் நிதித் துறைக்கு ஏற்­படக்­கூ­டிய இடர்­க­ளை­யும் அந்­தத் துறை அதிர்ச்­சி­க­ளைத் தாங்க எந்த அள­வுக்கு ஆற்­ற­லு­டன் இருக்­கிறது என்­ப­தை­யும் அந்த அறிக்கை ஆண்டு­தோ­றும் மதிப்­பி­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் வங்கி நிறு­வ­னத் தொழில்­துறை, குடும்­பங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான நிதி இடர் அட்­ட­வணை என்ற ஓர் அட்­ட­வ­ணையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அந்த மதிப்­பீட்டை ஆணை­யம் செய்து வரு­கிறது.

வட்டி கூடும் நிலையில் புதிதாக கடன் வாங்குவதில் மிகவும் கவனம் தேவை என அறிவுரை