'நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கவே சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது'

'நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கவே சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது'

3 mins read
0268aa15-7e1e-42a6-bb99-3369d21fecdd
-

முன்­னாள் பாட்­டா­ளிக் கட்சி நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரான ரயீசா கான் மீது அளிக்­கப்­பட்ட புகார் தொடர்­பில் இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யைப் பற்றி நாடா­ளு­மன்­றத்­திற்­குத் தெரி­விக்­கவே சிறப்­புரிமை­கள் குழு அதன் சிறப்பு அறிக்­கையை வெளி­யிட்­டது என்று நாடா­ளு­மன்ற அலு­வ­ல­ரின் செய­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

கடந்த வாரம் வியா­ழக்­கி­ழமை, வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரு தினங்­க­ளன்று நடந்த விசா­ர­ணை­யில் வாய்­மொ­ழி­யா­கத் திரட்­டப்­பட்ட ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் சாட்­சி­யம் அளிக்­காத நிலை­யில், சிறப்பு அறிக்­கையை வெளி­யிட்ட அதன் முடிவு குறித்­துக் கேள்­வி­கள் எழுந்­ததை அடுத்து நாடா­ளு­மன்ற அலு­வ­ல­ரின் செய­ல­கம் இவ்­வாறு தெரி­வித்­தது.

"விசா­ரணை எந்த நிலை­யில் உள்­ளது என்­பதை நாடா­ளு­மன்­றத்­திற்­குச் சிறப்­பு­ரி­மை­கள் குழு தெரி­வித்து வரும். பின்­னர், இறுதி அறிக்கை ஒன்­றும் வெளி­யி­டப்­படும்," என்­றது செய­ல­கம்.

நாடா­ளு­மன்ற நிலை ஆணை 105(2) படி, விசா­ரணை நடந்­து­வரும் கால­கட்­டத்­தில் எந்­நே­ரத்­தி­லும் ஏதே­னும் ஒரு கார­ணத்­துக்­காக நாடா­ளு­மன்­றத்­திற்­குத் தெரி­விப்­ப­தற்­காக சிறப்­பு­ரி­மை­கள் குழு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளி­யி­ட­லாம் என்­ப­தைச் செய­ல­கம் மேற்­கோள் காட்­டி­யது.

இத்­த­கைய சிறப்பு அறிக்­கை­கள் முன்­ன­தாக வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் அறி­யப்­ப­டு­கிறது.

நாடா­ளு­மன்­றத்­தில் பொய் உரைத்­த­தாக ஒப்­புக்­கொண்ட திரு­வாட்டி கான், தமது கட்­சி­யி­லி­ருந்­தும் செங்­காங் குழுத்­தொ­குதி எம்.பி. பத­வி­யி­லி­ருந்­தும் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வில­கி­னார். அவ­ருக்கு எதி­ராக அளிக்­கப்­பட்ட புகார் தொடர்­பில் சிறப்­பு­ரி­மை­கள் குழு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

புகார் தொடர்­பான எந்த ஒரு விவ­கா­ரத்­தை­யும் அலசி ஆராய்­வதே குழு­வின் கொள்கை. தனக்கு முன் வைக்­கப்­படும் ஆதா­ரங்­க­ளை­யும் சமர்ப்­பிப்­பு­க­ளை­யும் குழு தொடர்ந்து மறு­ஆய்வு செய்­து­வ­ரும் என்­றும் கூறப்­பட்­டது.

நாடா­ளு­மன்­றம் (சிறப்­பு­ரி­மை­கள், விலக்­கு­ரி­மை­கள் மற்­றும் அதி­காரங்­கள்) சட்­டத்­தின்­கீழ் எம்.பி.க்கள் மற்­றும் விசா­ர­ணை­யு­டன் தொடர்­பு­டைய வேறு நபர்­க­ளின் நடத்தை ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும்.

இறுதி அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படு­வ­தற்கு முன்­ன­தாக எந்­நே­ரத்­தி­லும் சாட்­சி­யம் அளிப்­ப­தற்­காக யாரை வேண்­டு­மா­னா­லும் விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யாக குழு ஆணை­யி­ட­லாம் என்று செய­ல­கம் விளக்­கி­யது.

தேவை ஏற்­ப­டின் புகார் தொடர்­பி­லான விசா­ர­ணை­யைத் தொடர்­வ­து­டன் மேற்­கொண்டு ஆதா­ரங்­களைக் குழு கேட்­ட­றி­ய­லாம் என்று கூறப்­பட்­டது. திங்­கட்­கி­ழ­மைக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யின் அறிக்கை குறிப்­பிட்­டி­ருந்­தது.

சிறப்­பு­ரி­மை­கள் குழு வெளி­யிட்ட அறிக்­கை­யில் பல தக­வல்­கள் தெரி­விக்­கப்­பட்­டன.

ஆகஸ்ட் 3ஆம் தேதி­யன்று தாம் உரைத்த பொய்யை திரு­வாட்டி கான் தொட­ர­வேண்­டும் என்று அவ­ருக்­குப் பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான பிரித்­தம் சிங், பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் சில்­வியா லிம், பாட்­டா­ளிக் கட்­சி­யின் துணைத் தலை­வர் ஃபசால் மானாப் ஆகி­யோர் கூறி­ய­தாக திரு­வாட்டி கான் அளித்த வாக்­கு­மூ­லம் அதில் இடம்­பெற்­றி­ருந்­தது.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று பாட்­டா­ளிக் கட்­சி­யின் செய்­தி­யாளர் கூட்­டத்­தில் கூறப்­பட்ட தக­வல்­களி­லி­ருந்து இது மாறு­பட்­டி­ருந்­தது.

தாம் கூறிய பொய்க்கு திரு­வாட்டி கான் பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் தாம் கூறி­யது பொய் என்று அவர் ஒப்­புக்­கொள்ள வேண்­டும் என்­றும் தாம் அறி­வு­றுத்­தி­ய­தாக அக்­கூட்­டத்­தில் திரு சிங் கூறி­யி­ருந்­தார்.

நாடா­ளு­மன்­றச் சிறப்­பு­ரி­மை­கள் குழு­வின் பணி­கள் இன்­ன­மும் தொடர்­வ­தால், பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்கு எதி­ரா­கக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் கட்சி பதி­ல­ளிப்­பது முக்­கி­யம் என்று நேற்று முன்­தி­னம் பாட்­டா­ளிக் கட்சி தெரி­வித்­தது.

அத்­து­டன் வியா­ழக்­கி­ழ­மை­யன்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில், சிறப்­பு­ரி­மை­கள் குழு முன்­னி­லை­யில் தாம் சாட்­சி­யம் அளிக்­கத் தயா­ராக இருப்­ப­தாக திரு சிங் கூறி­யி­ருந்­த­தை­யும் கட்சி நேற்று முன்­தி­னம் மீண்­டும் வலி­யு­றுத்­தியது.

நாடா­ளு­மன்­றத்­தின் இணை­யத்­த­ளத்­தில் சிறப்­பு­ரி­மை­கள் குழு­வின் சிறப்பு அறிக்கை வெளி­யிடப்­பட்­டது.