'பிரித்தம் சிங் கூறியது உண்மை அல்ல'

1 mins read
53f54ccf-96b6-4b6f-aa43-141972728b23
-

பாட்டாளிக் கட்சியை விட்டு முன்னாள் பாட்டாளிக் கட்சி எம்.பி. யாவ் ஷின் லியோங் சென்றது குறித்து கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறிய தகவல்கள் உண்மையல்ல என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நேற்று திரு யாவ் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் செங்காங் குழுத்தொகுதி எம்.பி. ரயீசா கான் கட்சியிலிருந்து விலகியதை அடுத்து கடந்த வியாழக்கிழமையன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றுக்குப் பாட்டாளிக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அப்போது 2012ல் திரு யாவ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, திரு சிங் அளித்த பதிலில் உண்மை இல்லை என்றார் திரு யாவ். திருமணமான நிலையில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்ட திரு யாவ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தம் நடத்தைக்காக திரு யாவ் பொறுப்பேற்கவில்லை என்று திரு சிங் கூறியிருந்தார். ஆனால், அது உண்மையல்ல என்றார்

திரு யாவ்.