மூதாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்த பணிப்பெண்ணுக்கு 30 வாரச் சிறை

2 mins read
e6ffc890-8b99-4c4e-b2de-9dad92eae7c3
இம்மாதம் 6ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வந்த அயே அயே நயிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

படுத்த படுக்­கை­யாக தன்­னைப் பாது­காத்­துக் கொள்ள இய­லாத 76 வயது மூதாட்­டி­யின் தலை­ முடியை இழுத்­த­தோடு அவ­ரது முகத்­தி­லும் வாயி­லி­லும் இடித்­துக் காயப்­ப­டுத்­திய பணிப்­பெண்­ணுக்கு நேற்று 30 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மியன்­மார் நாட்­டைச் சேர்ந்த 40 வயது அயே அயே நயிங், எளி­தில் பாதிப்­ப­டையக்­கூ­டிய நப­ரைத் தாக்­கி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்பட்­டது.

மூதாட்­டியை பரா­ம­ரிப்­ப­தற்­காக அவ­ரது மகள் ஈசூ­னில் உள்ள தனது வீட்­டில் அயே அயேயை வேலைக்கு அமர்த்­தி­யி­ருந்­தார்.

தன்­னை அயே அயே அடிப்­ப­தாக மூதாட்டி கூறி­ய­தைத் தொடர்ந்து அவ­ரது மகள் வீட்­டில் கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வைப் பொருத்­தி­யி­ருந்­தார்.

அதில் பதி­வான சில காட்­சி­கள் மூதாட்­டி­யின் மகளை அதிர்ச்சி அடைய வைத்­தது.

கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பதி­வான ஒரு காட்­சி­யில் படுத்­துக்­கி­டக்­கும் மூதாட்­டி­யின் மூக்கை விர­லால் அழுத்­திப் பிடித்து அவ­ரது முகத்­தில் மாறி மாறி அவர் குத்­து­கி­றார்.

மற்­றொரு சம்­ப­வத்­தில் மூதாட்டி­யின் தலை­மு­டியை இழுத்து அவர் உட்­கார வைக்­கி­றார்.

சில நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு படுத்­துக் கிடக்­கும் மூதாட்­டி­யின் வாயை தண்­ணீர் போத்­த­லால் அவர் அழுத்­து­கி­றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சம்­ப­வத்­தில் மூதாட்­டி­யின் முகத்­துக்கு அருகே மணி­ய­டிக்­கும் கடி­கா­ரத்தை ஆட்டி, அத­னா­லேயே அவ­ரது வாயை அயே அயே இடிக்­கி­றார்.

மூதாட்­டிக்கு நடந்த மருத்­துவ சோத­னை­யில் அவ­ரது நெற்றி, வலது கன்­னம், இடது தோள்­பட்டை, இடது தொடை ஆகிய இடங்­களில் சிராய்ப்­புக் காயம் இருந்­தது கண்டு பி­டிக்­கப்­பட்­டது.

அேய அயே­வுக்கு தன்னை சரி­செய்­து­கொள்­வ­தில் பிரச்­சினை இருப்­ப­தாக மன­ந­லக் கழ­கம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது பேசிய அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் செலன் யாப், முத­லா­ளி­யி­டம் அயே­வுக்கு எந்­த­வி­தப் பிரச்­சி­னை­யும் இல்லை என்­றும் முத­லாளி அவரை நல்­ல­வி­த­மாக நடத்­தி­ய­தா­க­வும் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் வேலையை ஓழுங்­காக செய்­யா­த­போது முத­லாளி திட்­டி­ய­தால் மன­உ­ளைச்­ச­லுக்கு ஆளா­கிய அயே­வுக்கு முத­லாளி மீது வெறுப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் தனது கோபத்தை மூதாட்­டி­யி­டம் காட்­டி­ய­தா­க­வும் வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

அயே அயேயை பிர­தி­நி­தித்த வழக்­க­றி­ஞர் லும் குவோ ரோங், தனது கட்­சிக்­கா­ர­ருக்கு ஆறு மாதம் சிறைத் தண்­டனை மட்­டுமே விதிக்க வேண்­டும் என்று வலி­ யு­றுத்­தி­னார்.

"அயே அயே திட்­ட­மிட்டு மூதாட்­டி­யைத் தாக்­க­வில்லை. ஆறு பேர் கொண்ட குடும்­பத்­தில் வீட்டு வேலை­க­ளை­யெல்­லாம் முடித்­து­விட்டு மூதாட்­டி­யை­யும் பார்த்­துக் கொள்ள வேண்­டி­யி­ருந்­த­தால் கோபத்­தில் மூதாட்­டி­யைத் தாக்­கி­யி­ருக்­கி­றார். மற்­ற­படி மூதாட்­டிக்கு அவ­ரது கவ­னிப்பு பிடித்­தி­ருந்­தது. மூதாட்­டியை அயே அயே தனது பாட்­டி­யா­க­வும் கரு­தி­னார்," என்று அயே அயே­யின் வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­திய ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும் மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் 5,000 வெள்ளி வரை அப­ரா­த­மும் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வ­ருக்கு எதி­ரான குற்­றச்­செ­ய­லாக இருந்­தால் அதி­க­பட்ச தண்­டனை இரண்டு மடங்­குக்கு அதி­க­ரிப்­ப­ட­லாம். ஆனால் அயே அயே­வுக்கு 30 வாரச் சிறைத்­தண்­டனை மட்­டும் விதிக்­கப்­பட்­டது.