'விடிஎல்' விமானச் சேவை: ஜெட்ஸ்டார் ஏஷியாவுக்கு அனுமதி

1 mins read
eb515b76-acac-4bc0-9b9a-f4bfbce0b879
-

தாய்­லாந்து மற்­றும் கம்­போ­டி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு தனிமை உத்­த­ரவு விலக்கு பெற்ற பய­ணச் சேவையை நடத்த மலி­வுக் கட்­டண விமான நிறு­வ­ன­மான ஜெட்ஸ்­டார் ஏஷியா அனு­மதி பெற்­றுள்­ளது.

'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான பய­ணத் தடத் திட்­டம் அடுத்த வாரம் மேலும் ஆறு நாடு­க­ளுக்கு விரி­வு­ ப­டுத்­தப்­பட உள்ள நிலை­யில் ஜெட்ஸ்­டார் ஏஷியா இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

டிசம்­பர் 15 முதல் பேங்­காக்­கி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வாரம் ஐந்து விடி­எல் விமா­னங்­கள் வரை தான் இயக்­கப்­போ­வ­தாக அது நேற்று தெரி­வித்­தது. மேலும் கம்­போ­டி­யா­வின் நோம்பென் நக­ரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­கான விமா­னச் சேவையை டிசம்­பர் 16 முதல் தொடங்க இருப்­ப­தா­க­வும் இந்த வழித்­த­டத்­தி­லும் வாரம் ஐந்து விடி­எல் விமா­னங்­கள் இயக்­கப்­படும் என்­றும் ஜெட்ஸ்­டார் ஏஷியா மேலும் தெரி­வித்­துள்­ளது.