30% உள்துறைக் குழு ஊழியருக்கு பூஸ்டர்

1 mins read
30431d24-e136-4e27-ad8b-aca111324bb1
-

உள்­துறை குழு முன்­க­ளப் பணி­யா­ளர்­களில் சுமார் 30 விழுக்­காட்­டி­னர் அல்­லது 10,090 பேர் கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு உள்­ள­னர். இது நவம்­பர் 26ஆம் தேதி நில­வ­ரம். இந்த முன்­க­ளப் பணி­யா­ளர்­களில் 18 வய­துக்­கும் 29 வய­துக்­கும் இடைப்­பட்ட அதி­கா­ரி­களும் இடம்­பெற்று உள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் சிங்­கப்­பூர் காவலர் படை, சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை, குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம், சிங்­கப்­பூர் சிறைச் சேவை போன்­ற­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள். முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­களும் இந்­தக் குழு­வில் உள்­ள­னர். இது தொடர்­பாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் பேசிய உள்­துறை அமைச்­சின் பேச்­சா­ளர், "தகுதி உள்ள அதி­கா­ரி­கள் அனை

­வ­ரும் 2022 முதல் காலாண்­டிற்­குள் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட வேண்­டும் என்­பது உள்­து­றைக் குழு­வின் இலக்கு," என்­றார்.

இவர்­கள் மொடர்னா அல்லது ஃபைசர்-பயோ­என்­டெக் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பின்­னர் இரு வாரங்­

க­ளுக்குக் கடு­மை­யான உட­லு­ழைப்­புத் தேவைப்­படும் நட­வ­டிக்­கை­களில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­வர்.