பங்கு விலையைக் கணிக்கும் நுண்சில்லு உருவாக்கம்

2 mins read
9d49a550-bbda-4d78-acc9-6366ad7729d5
துகள் இயக்கப் பொறியியல் நிலையம் 2018 முதல் செயல்படு கிறது. வலது: புதிதாக உருவாக்க ப்பட்டுள்ள நுண்ணிய சில்லு. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துகள் இயக்­க­ப் பொறி­யி­யல் நிலை­யம் புதிய நுண்சில்லு ஒன்றை உரு­வாக்கி இருக்­கிறது.

கைவி­ரல் நகத்­தை­விட சிறி­ய­தாக இருக்­கும் அந்­தக் கணி­னிச் சில்லு, பங்­குச் சந்­தை­யில் கைமாறும் பங்­கு­களின் செயல்­தி­றன் எப்­படி இருக்­கும் என்­பதைக் கணிக்­கும்.

கொவிட்-19 குழு­மங்­கள் போன்ற முன்­மா­திரி கட்­ட­மைப்­பு­களை, தக­வல்­களை குறி­மு­றைக்கு மாற்­றும்.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், QSec என்ற அந்த நிலை­யத்தை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாகத் திறந்­து­வைத்­தார்.

துகள் இயக்­க­ப் பொறியி­யல் (குவாண்டம்) தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தி மேலும் பல கணி­னிச் சில்­லு­களை உரு­வாக்­கு­வ­தன் தொடர்­பில் அந்த நிலை­யம் ஆய்­வு­களை நடத்­தும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

துகள் இயக்­க­ப் பொறியி­யல் ஆய்­வு­களில் ஒரு முன்­னணி மைய­மா­கத் திகழ்­வது சிங்­கப்­பூ­ரின் இலக்கு என்று அந்த நிகழ்ச்­சி­யில் பேசிய இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் சுப்ரா சுரேஷ் தெரி­வித்­தார். துகள் இயக்­க­ப் பொறியிய லில் தேசிய ஆய்வு அற­நி­று­வ­னம் 2018 முதல் $120 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகையை முத­லீடு செய்து இருக்­கிறது என்­றார் அவர்.

அந்­தப் புதிய நிலை­யம் 2018 முதல் செயல்­ப­டு­கிறது. என்­றா­லும் கொவிட்-19 கார­ண­மாக அதன் அதி­கா­ர­பூர்வ தொடக்­க­விழா தாம­த மடைந்து வந்­தது.

துகள் இயக்­க­ப் பொறியி­யல் இடம்­பெ­றும் முன்­னேற்­றங்­களை நடை­முறை உல­கிற்­கான தீர்­வு­களாக மாற்­று­வது ஆய்­வா­ளர்­க­ளுக்­குப் பெரிய சவா­லாக இருக்­கிறது என்று பேரா­சி­ரி­யர் சுரேஷ் தெரி­வித்­தார்.

இதில் புதிய நிலை­யம் உரு­வாக்க இலக்கு நிர்­ண­யித்து இருக்கும் கணி­னிச் சில்­லு­கள் பெரும் உத­வி­யாக இருக்­கும் என்­றார் அவர். புதிய நிலை­யத்­தில் 30 ஆய்­வா­ளர்­கள் செயல்­ப­டு­கி­றார்­கள். அதற்குக் கல்வி அமைச்சு மானி­ய­மும் இந்­தப் பல்­க­லைக்­க­ழ­க­மும் நிதி உதவி அளிக்­கின்­றன.