பிள்ளைகளின் மனநலம் காக்கும் வகையில் பெற்றோரிடம் மனநல அறிவு மேம்பட உதவி

பிள்ளைகளின் மனநலம் காக்கும் வகையில் பெற்றோரிடம் மனநல அறிவு மேம்பட உதவி

2 mins read
3dc46b1a-198b-42ad-bb29-e152c3fdc4f9
-

மன­ந­லன் பற்­றிய பல்­வேறு தக­வல்­க­ளை­யும் தெரிந்­து­கொள்ள விரை­வில் பெற்­றோ­ருக்கு உதவி கிடைக்­கும்.

உடல்­, மனந­லப் பாதிப்பு இல்­லா­மல் இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­து வது பற்­றி­யும் அவர்­கள் அதி­க­மான அறி­வைப் பெறு­வார்­கள். அதன் கார­ண­மாக பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளி­டம் மன­ந­லப் பிரச்­சி­னை­கள் பற்றி ஒளி­வு­ம­றைவு இல்­லா­மல் ஆக்­க­க­ர­மான முறை­யில் பேச முடி­யும்.

மன­ந­ல­னைப் பொறுத்­த­வரை பெற்­றோர்­ தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு உதவ விரும்­பு­கி­றார்­கள் என்­ப­தால் கல்வி அமைச்சு பெற்­றோர்­க­ளுக்கு கல்வி, பயிற்சி வளங்­களை வழங்க இருக்­கிறது.

அதன்­மூ­லம் அவர்­கள் சிறந்த முறை­யில் தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்க முடி­யும்.

இளை­யர்­க­ளி­டம் மன­ந­லம் எப்­படி இருக்­கிறது என்­ப­தைக் கண்­டறிய 12 முதல் 35 வரை வய­துள்ள 675 பேரை உள்­ள­டக்கி 'சில்­வர் ரிப்பன் (சிங்­கப்­பூர்)' என்ற அமைப்பு ஜூலை மாதத்­திற்­கும் டிசம்­பர் மாத தொடக்­கத்­திற்­கும் இடை­யில் ஓர் ஆய்வை நடத்­தி­யது.

அதில் கலந்­து­கொண்­ட­வர்­களில் 98 விழுக்­காட்­டி­னர் மன­உளைச்­சல் தங்­க­ளுக்கு இருப்­பதா­கக் கூறி­னர். தனி­மையை உணர்­வதாக 88% தெரி­வித்­த­னர். இழப்பு ஏற்­பட்­டு­விட்ட எண்­ணம் தங்­களி டம் இருப்­ப­தாக 89% கூறி­னர்.

சில நேரங்­களில் உயிர்­மாய்ப்பு எண்­ணம்கூட தங்­க­ளுக்கு ஏற்­பட்­ட­தாக 36 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர். இத­னை­ய­டுத்து புதிய முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

சில்­வர் ரிப்பன் மன­நல விருது வழங்­கும் நிகழ்ச்சி நேற்று மெய்­நி­கர் ரீதி­யில் நடந்­தது. அதில் கலந்­து­கொண்ட கல்வி, சமுதாய, குடும்ப மேம்­பாட்­டுத் துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

பெற்­றோ­ரின் எதிர்­பார்ப்பு, சொந்த எதிர்­பார்ப்­பு­கள், கொவிட்-19 உள்­ளிட்ட பல­த­ரப்­பட்ட அம்­சங்­கள் காரணமாக மன­ந­லப் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று இளை­யர்­களில் பல­ரும் தெரி­வித்துள்ள தாக அமைச்­சர் கூறி­னார்.