சிங்கப்பூரர்களுக்கு உடனடியாக தேவைப்படும் திறன்கள்

சிங்கப்பூரர்களுக்கு உடனடியாக தேவைப்படும் திறன்கள்

2 mins read
fe2df4e5-e2c2-4426-bb45-01830cef1df3
-

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தேவைப்­படும் திறன்­களை ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் (எஸ்­எஸ்ஜி) அமைப்பு அடை­யா­ளம் கண்­டுள்­ளது. முதல்­மு­றை­யாக 'எதிர்­கா­லப் பொரு­ளி­ய­லுக்­குத் தேவைப்­படும் திறன்­கள்' அறிக்கை என்ற ஒன்றை நேற்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வெளி­யிட்­டார்.

மின்­னி­லக்­கம், பசுமை, பரா­மரிப்­புத் துறை­களில் 20 திறன் தொகுப்பு­களை அந்த அறிக்கை சுட்­டிக்­காட்டு­கிறது. அந்­தத் திறன்­கள் அடுத்த ஓராண்டு முதல் மூன்­றாண்டு­களில் மூன்று துறை­க­ளுக்­கும் அவ­ச­ர­மா­கத் தேவைப்­ப­டு­வ­தாக அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

'எதிர்­கா­லப் பொரு­ளி­ய­லுக்­குத் தேவை­யான திறன்­கள் கருத்­தரங்கு' நிகழ்­வில் தமது தொடக்­க­வு­ரை­யு­டன் அமைச்­சர் அந்த அறிக்­கையை வெளி­யிட்­டார்.

முழுப் பொரு­ளி­ய­லை­யும் அறிக்கை உள்­ள­டக்­க­வில்லை என்­றா­லும் நாட்­டின் மிக முக்­கிய வளர்ச்­சித் துறை­க­ளாக விளங்­கும் அந்த மூன்று துறை­க­ளின் வேலை­களை­யும் திறன் போக்­கு­க­ளை­யும் அறிக்கை வெளிச்­சம் போட்­டுக் காட்­டு­வ­தாக அமைச்­சர் கூறினார்.

"இன்று 17 துறை­க­ளி­லுள்ள 450க்கும் மேற்­பட்ட வேலை­க­ளுக்­குப் பசுமை தொடர்­பான திறன்­கள் பணி­யின்­போது தேவைப்­ப­டு­கின்­றன. மூப்­ப­டை­யும் சமூ­கம் பெரி­தா­கி­வ­ரும் நிலை­யில், பரா­ம­ரிப்­புப் பொரு­ளி­ய­லில் உள்­ளூர் ஊழி­யர்­களுக்­கான தேவை தொடர்ந்து வேக­மாக அதி­க­ரிக்­கும்.

"வளர்ச்சி அடை­யும் துறை­களை நாம் அடை­யா­ளம் காண்­ப­தற்­காக இங்கு வர­வில்லை. வெவ்­வேறு துறை­களில், வெவ்­வேறு வேலை­களில் தேவைப்­படும் திறன் தொகுப்பு­களை மக்­கள் அறிந்து திட்­ட­மி­டு­வதை நாம் முக்­கி­ய­மாக கரு­து­கி­றோம்," என்­றார் திரு சான்.

மின்­னி­லக்­கத் துறை­யைப் பொறுத்­த­வரை, தொழில்­நுட்­பப் பயன்­பாடு, தக­வல் பகுப்­பாய்வு, சந்தை ஆய்வு ஆகி­யவை ஆக அதி­க­மா­கத் தேவைப்­படும் திறன்­களாக உள்­ளன.

பசு­மைத் துறை­யில் சுற்­றுப்­புற பாதிப்­பைக் குறைக்­கும் வடி­வமைப்பு, கரிம நிர்­வா­கம், சுற்­றுச்­சூ­ழல் நிர்­வாக முறை ஆகிய திறன்­களை அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

பரா­ம­ரிப்­புத் துறை­யில் திட்ட ஆக்­கம், நிய­தி­கள், பங்­கு­தா­ரர்­கள் நிர்­வா­கம், எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கும் நடை­மு­றை­கள் ஆகி­யவை திறன்­க­ளாக கூறப்­ப­டு­கின்­றன.

அந்த மூன்று துறை­க­ளை­யும் மேலும் உட்­பி­ரி­வு­க­ளா­கப் பிரித்து அவற்­றில் தேவைப்­படும் முன்­னு­ரி­மைத் திறன்­க­ளை­யும் அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

அந்த அறிக்கை 16 மென் திறன்­களை 'முக்­கிய மூலா­தார திறன்­கள்' என்று குறிப்­பிட்­டுள்­ளது.

விமர்­சன ரீதி­யா­கச் சிந்­திப்­பது, மற்­ற­வர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டு­வது, என்­றென்­றும் ஏற்­பு­டைய வகை­யில் திகழ்­வது ஆகிய மூன்று தொகுப்பு­களாக அவை வகைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

அறிக்­கையை எஸ்­எஸ்ஜி வரும் ஆண்­டு­களில் விரி­வு­ப­டுத்­தும் என்று திரு சான் குறிப்­பிட்­டார்.