புதுப்பிப்புப் பணிக்காக மூடப்படவுள்ளது தஞ்சோங் காத்தோங் காம்பிளக்ஸ்

புதுப்பிப்புப் பணிக்காக மூடப்படவுள்ளது தஞ்சோங் காத்தோங் காம்பிளக்ஸ்

1 mins read
f8dfde3f-df56-474f-bbfd-ce4469c48750
நான்கு மாடிகள் கொண்ட தஞ்சோங் காத்தோங் காம்பிளக்ஸ் 1984ல் கட்டப்பட்டது. மலாய்/முஸ்லிம் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப பலவகையான கடைகள் இங்கு உள்ளன.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பல­ரும் அறிந்த தஞ்­சோங் காத்­தோங் காம்­பி­ளக்ஸ், புதுப்­பிப்­புப் பணிக்­காக 2023ஆம் ஆண்­டின் பிற்­பா­தி­யில் மூட­வுள்­ளது. கேலாங் சிராய் வட்­டா­ரத்­தில் புகழ்­பெற்ற ஒரு கடைத்­தொ­குதி­யாக விளங்­கும் அது, புதுப்­பொலிவு பெறும் என்று கூறப்­படு­கிறது.

வரு­கை­யா­ளர் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கச் செய்­ய­வும் கேலாங் சிராய் வட்­டா­ரத்­தின் உரு­மாற்ற மேம்­பாட்­டை­யொட்­டி­யும் புதுப்­பிக்­கும் முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­களாக நடை­பெ­ற­வுள்ள மேம்­பாட்­டுப் பணி­களில் உண­வ­கங்­களுக்­கான கூரைத் தளப் பகுதி ஒன்­றும் அடங்­கும்.

ஏறத்­தாழ 37 ஆண்டு பழைமை வாய்ந்த இக்­கட்­ட­டத்­தில் சமூ­கத் திட்­டங்­க­ளுக்­காக கூடு­தல் இட­வ­சதி ஏற்­ப­டுத்­தித் தரப்­படும் என்­றும் சிங்­கப்­பூர் நில ஆணை­யம் (எஸ்­எல்ஏ) நேற்று தெரி­வித்­தது.

கட்­ட­டத்­தின் கலா­சார, மர­பு­டை­மையை அதி­க­ரிக்­கும் அம்­சங்­களில் மாற்­றம் ஏதும் இருக்­காது என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது. அடுத்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதி­யு­டன் குத்­த­கைக் காலம் முடி­வ­டைய உள்ள நிலை­யில், கட்­டடத்­தின் 106 குத்­த­கை­தா­ரர்­க­ளுக்­கும் மேலும் ஆறு மாதக் கால நீட்­டிப்பு வழங்­கப்­படும் என்று கூறப்­பட்­டது. இடம்­மாற கூடு­தல் நேரம் கிடைப்­ப­து­டன் நோன்­புப் பெரு­நாள் காலத்­தில் மேலும் அதிக விற்­பனை செய்து பல­ன­டைய இது அவர்­களுக்கு வழி ஏற்­ப­டுத்­தித் தரும் என்று எஸ்­எல்ஏ குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரின் மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரின் தேவை­க­ளுக்கு ஏற்ப பல­த­ரப்­பட்ட கடை­க­ளைக் கொண்­டது தஞ்­சோங் காத்­தோங் காம்­பி­ளக்ஸ்.

தற்­போது கட்­ட­டத்­தின் இயந்­திர, மின்­சார அமைப்­பு­மு­றை­கள் பழை­யவை என்­றும் உட­ன­டி­யாக அவை மாற்­றப்­பட வேண்­டும் என்­றும் எஸ்­எல்ஏ தெரி­வித்­தது.