தோ பாயோ வட்டாரத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கிடந்ததைக் கண்டு வட்டாரவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். பிற்பகல் 2 மணியளவில் 27 தோ பாயோ ஈஸ்ட் பகுதியில் அமைந்திருந்த மரம், முறிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. மரம் வீழ்ந்து ஐந்து நிமிடங்களில் அருகில் இருந்த இன்னொரு மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்றும் முறிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. கடந்த பல நாள்களாக சிங்கப்பூரின் பல வட்டாரங்களில் காற்று பலமாக வீசி வருவதால் இதுபோன்ற மரம் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து இருக்கலாம். எனவே, மரங்களுக்கு அருகே நடந்து செல்லும்போதும் சிறார்கள் விளையாடும்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

