பாலியல் துன்புறுத்தலால் வேலையைக் கைவிடும் பெண்கள்: ஆய்வில் தகவல்

பாலியல் துன்புறுத்தலால் வேலையைக் கைவிடும் பெண்கள்: ஆய்வில் தகவல்

1 mins read
c3562107-32ab-4a11-a6e3-b3adf4941059
-

வேலை­யி­டத்­தில் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்­கு ஆளா­கும் பெண்­

க­ளின் உற்­பத்­தித்­தி­ற­னில் அடிக்­கடி குறை­பாடு ஏற்­ப­டு­வ­தாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது. சக ஊழி­யர்­க­ளி­டையே கசப்­பான உற­வு­கள் இருப்­ப­தால் வேலை­யில் அவர்­க­ளுக்­குப் போது­மான மன­நி­றைவு கிடைப்­ப­தில்லை என­வும் செய­லாற்­றல் மற்­றும் ஆராய்ச்­சிக்­கான பெண்­கள் நலச்­சங்­கம் (அவேர்) நடத்­திய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, பாதிக்­கப்­பட்ட பெண்­களில் பெரும்­பா­லா­னோர் வேலை­யைக் கைவி­டு­வ­தா­க­வும் பல மாதங்­கள் வேலை­யின்றி இருப்­ப­தா­க­வும், இறு­தி­யில் வேறு வழி­யின்றி குறைந்த சம்­பள வேலை­களை அவர்­கள் ஏற்­ப­தா­க­வும் ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

'சிங்­கப்­பூர் பெண்­க­ளுக்கு வேலை­யிட பாலி­யல் துன்­பு­றுத்­த­லால் வாழ்க்­கைத்­தொ­ழில் மற்­றும் நிதி­யில் ஏற்­ப­டும் பாதிப்புகள்' என்­னும் தலைப்­பில் நடத்­தப்­பட்ட ஆய்­வின் முடி­வு­கள் அடங்­கிய அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

பெண்­க­ளின் வாழ்க்­கைத்­தொ­ழி­லில் வேலை­யிட பாலி­யல் துன்­பு­றுத்­தல் ஏற்­ப­டுத்­தும் தாக்­கங்­க­ளுக்கு முக்­கி­ய­வத்­து­வம் கொடுத்து ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான பெண்­க­ளி­டம் காணப்­படும் குறு­கிய காலப் பாதிப்­பு­க­ளாக உற்­பத்­தித்­தி­றன் குறைவு, மனை­நி­றைவு இன்மை, சக ஊழி­ய­ரு­ட­னான உற­வில் இறுக்­கம் போன்­றவை பட்­டி­

ய­லி­டப்­பட்டுள்­ளன.

அதே­நே­ரம், துன்­பு­றுத்­தல் கார­ண­மாக தங்­க­ளது வேலை­யைக் கைவிட்டு வேலை­யி­டத்­தை­விட்டு வெளி­யே­று­வது, குறைந்த சம்­ப­ளம் தரும் வேறு வேலைக்­குச் செல்­வது, பொரு­ளி­யல் பாது­காப்­பில் ஏற்­படும் தாக்­கம் போன்­றவை நீண்­ட­கால பாதிப்­பு­க­ளாக ஆய்வு குறிப்­பி­டு­கிறது.