போதைப்பொருள், மோசடி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் 136 பேரிடம் காவல்துறை விசாரணை

போதைப்பொருள், மோசடி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் 136 பேரிடம் காவல்துறை விசாரணை

2 mins read
d4ad3e7f-4462-4ef9-9333-c9562b822200
-

பல்­வேறு குற்­றங்­கள் தொடர்­பில் 136 சந்­தேக நபர்­க­ளி­டம் விசா­ரணை நடை­பெ­று­கிறது. இவர்­கள் 15 வய­துக்­கும் 77 வய­துக்­கும் இடைப்­பட்ட வய­தி­னர் என்று காவல்துறை நேற்று கூறி­யது.

ஒருவார காலம் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் போதைப்­பொ­ருள் பிடி­பட்ட இவர்­களில் 32 பெண்­களும் அடங்­கு­வர்.

போதைப்­பொ­ருள் வைத்­தி­ருத்­தல், விப­சா­ரம், சூதாட்­டம், கடன்­மு­த­லை­க­ளுக்கு உதவி, கடன் மோசடி, தலை­ம­றை­வுக் கும்­ப­லில் இடம்­பெற்­றி­ருத்­தல் ஆகிய குற்­றங்­கள் தொடர்­பாக இவர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த சனிக்­கி­ழமை முடி­வ­டைந்த சோதனை நட­வ­டிக்­கையை ஜூரோங் காவல்­துறை பிரிவு முன்­னின்று நடத்­தி­யது.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு, குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் மற்­றும் சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­களும் இந்­ந­ட­வ­டிக்­கை­யில் இணைந்து இருந்­த­னர்.

சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை, குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் சேர்ந்து நடத்­திய சோத­னை­யில் 35 வயது ஆட­வர் பிடி­பட்­டார். சுங்­கம் மற்­றும் குடி­நு­ழை­வுச் சட்­டங்­

க­ளின்­கீழ் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்­டோ­ரில் 10 பெண்­கள் உள்­ளிட்ட 14 பேரைக் கொண்ட கும்­ப­லும் அடங்­கும். 18 வய­துக்­கும் 60 வய­துக்­கும் இடைப்­பட்ட இவர்­கள் இணைய வர்த்­தக மோசடி, வர்த்­த­கக் குற்­றங்­கள் போன்­றவை தொடர்­பில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

$440,000க்கும் மேற்­பட்ட தொகை ஏமாற்­றப்­பட்­ட­தாக தீவு முழு­வ­தும் பதிவு செய்­யப்­பட்ட 102 மோசடிப் புகார்­க­ளுக்­கும் இந்­தக் கும்­ப­லுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

சமூ­கத்­தைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும் தொடர் முயற்­சி­

க­ளின் ஒரு பகு­தி­யாக குற்­றச் செயல்­க­ளுக்கு எதி­ரான இந்த வேட்டை நடத்­தப்­பட்­ட­தாக ஜூரோங் காவல்­துறை பிரிவு உதவி ஆய்­வா­ளர் ஷீ டெக் ஸி தெரிவித்­துள்­ளார்.