சிங்கப்பூரில் செயல்படும் நிறுவனங்கள், கொவிட்-19 காரணமாக ஏறத்தாழ இரண்டாண்டு காலம் பாதிக்கப்பட்டுவிட்டன.
அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலைக்கு அவை திரும்பி இருக்கின்றன.
இந்த நிலவரம் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவருகிறது.
இருந்தாலும்கூட, கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து முற்றிலும் மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு வர மேலும் ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் ஆகும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
சிங்கப்பூர் தொழில்துறைக் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவந்துள்ளன.
அந்த ஆய்வு, இந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதிக்கும் அக்டோபர் 1ஆம் தேதிக்கும் இடையில் நடத்தப்பட்டது.
முக்கியமான துறைகளைச் சேர்ந்த 1,096 நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன. அவற்றில் 80 விழுக்காட்டு நிறுவனங்கள் சிறிய, நடுத்தர நிறுவனங்கள். மற்றவை பெரிய நிறுவனங்கள்.

