பாலியல் வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயது ஆடவர் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இருந்தாலும் மதுபோதையில் இருந்த பெண்ணை அவர் மானபங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு மாற்றப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை 27 வயது வோங் ஷின் சியோங் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஊனமுற்றோர்களுக்கான கழிவறையில் பெண்ணின் உள்ளாடைகளை அவர் அகற்றியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட 27 வயது பெண் மதுபோதையில் இருந்ததால் அவரது உள்ளாடைகள் அகற்றப்பட்டதுகூட அவருக்குத் தெரியவில்லை.
வேறு ஒரு பெண், மானபங்கப்படுத்தப்பட்டதை போலிசார் விசாரித்தபோது இவரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
வோங் ஷின் சியோங் மானபங்கப்படுத்திய இரு பெண்களும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
2018 ஏப்ரல் ரிவர் வேலி, கிளார்க் கீயில் உள்ள கழிவறையில் 27 வயது பெண்ணை பலவந்தமாக வோங், 27, மானபங்கப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஸூக் இரவு கேளிக்கை விடுதியில் அந்தப் பெண்ணை வோங் சந்தித்தார்.
அவரை கழிவறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு உள்ளாடைகளை பாதியளவுக்கு இறக்கி அவரது பின்புறத்தை வோங் படம் பிடித்துள்ளார்.
என்ன நடந்தது என்பது சிறிது கூட பெண்ணுக்கு நினைவில் இல்லை.
பதின்ம வயது பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டதை வோங்கிடம் விசாரித்தபோது 27 வயது பெண்ணும் பாதிக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.
2019 மார்ச் மாதம் பதின்ம வயது பெண்ணை வோங் மானபங்கப்படுத்தினார்.
கேளிக்கை விடுதியில் நண்பர்களுடன் குடித்து நேரத்தைக் கழித்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்த பதின்ம வயது பெண் தனியாக இருப்பதை வோங் கண்டார்.
அவரிடம் பேசி வோங் டாக்சியில் அழைத்துச் சென்றுள்ளார்.
நீதிமன்ற விசாரணையில் பதின்ம வயது பெண்ணிடம் வோங் உடலுறவு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உடலுறவுக் கொண்டேன் என்ற வோங்கின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட வோங்குக்கு பிப்ரவரி 3ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.


