'எதிர்பாராத செலவுக்கான நிதியிலிருந்து முன்பணம் எடுக்கப்பட்டது'

'எதிர்பாராத செலவுக்கான நிதியிலிருந்து முன்பணம் எடுக்கப்பட்டது'

2 mins read
64f9a311-25d0-486b-8607-37581b2a7666
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பாதிப்­பைக் குறைக்க நட­வ­டிக்­கை­கள் எடுத்­து­வ­ரும் நிலை­யில் கடந்த செப்­டம்­பர் மாதம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி வரை ஊழி­யர்­க­ளுக்­கும் நிறுவ­னங்­க­ளுக்­கும் உத­வும் நோக்­கில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட $1.4 பில்­லி­யன் மதிப்­பி­லான திட்­டங்­கள் தொடர்­பான செல­வுக்­காக, எதிர்­பா­ராத செல­வுக்­கான நிதி­யி­லி­ருந்து நிதி அமைச்சு முன்­ப­ணம் எடுத்­துள்­ளது.

இது­கு­றித்து நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார். அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளைத் திட்­ட­மிட்­ட­படி சரி­யான நேரத்­தில் நடை­மு­றைப்­

ப­டுத்த எதிர்­பா­ராத செல­வுக்­கான நிதி­யி­லி­ருந்து அர­சாங்­கம் பணம் எடுத்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். இவ்­வாண்­டுக்­கான வரு­வாய் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட அதி­க­மாக இருப்­ப­தால் ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிதி­யைப் பெற சிங்­கப்­பூ­ரின் கையி­ருப்­பி­லி­ருந்து பணம் எடுக்­கத் தேவை­யில்­லை என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

எதிர்­பா­ராத செல­வுக்­கா­க கடந்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்­போது அர­சாங்­கம் $13 பில்­லி­யன் ஒதுக்­கி­யது.

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ், எதிர்­பா­ரா­த செல­வு­க­ளுக்கு நிதி திரட்ட நாடா­ளு­மன்­றம் புதிய நிதி­களை உரு­வாக்­க­லாம்.

எதிர்­பா­ராத செல­வுக்­கான நிதி­யி­லி­ருந்து முன்­ப­ணம் எடுப்­ப­தற்கு அதி­ப­ரின் ஒப்­பு­தல் தேவை.

"இந்த விவ­கா­ரம் குறித்து அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பி­டம் தெரி­வித்­தோம். எதிர்­பா­ராத செல­வுக்­கான நிதி­யி­லி­ருந்து முன்­ப­ணம் எடுக்க அவர் ஒப்­பு­தல் வழங்­கி­னார்," என்­றார் திரு வோங்.

"கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லையை எதிர்­கொள்ள நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­கி­றோம். ஓய்­வின்றி கடு­மை­யாக உழைத்துவ­ரும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்­கும் அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­கும் நான் நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

"ஒவ்­வோர் அமைப்பு, ஒவ்­வோர் அதி­கா­ரி­யின் முயற்சி விலை­ம­திப்­பற்­றது. அவை பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன," என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.