சிங்கப்பூர்-பிரிட்டன் புதிய மின்னிலக்க உடன்பாடு

2 mins read
d64cfe36-8094-4f23-b4c8-6234d81603dd
-

பிரிட்­ட­னு­டன் நேற்று கையெ­ழுத்­தான புதிய மின்­னி­லக்க வர்த்­தக உடன்­பாட்­டால் பிரிட்­ட­னி­ட­மி­ருந்து மலி­வான பொருட்­கள், சேவை­களை சிங்­கப்­­பூ­ரர்கள் விரை­வில் எதிர்­பார்க்­க­லாம்.

பிரிட்­ட­னுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான அந்த உடன்­பாடு அடுத்த ஆண்டு அம­லுக்கு வரு­கிறது.

இது, பிரிட்­ட­னின் முதல் மின்­னி­லக்க உடன்­பா­டா­க­வும் ஆசி­யா­னுக்­கும் ஐரோப்­பா­வுக்­கும் இடை­யி­லான முதல் மின்­னி­லக்க உடன்­பா­டா­க­வும் இருக்­கும்.

சிங்­கப்­பூர்-பிரிட்­டன் ஒப்­பந்­தம், இரு நாடு­க­ளுக்கு இடையே மின்­னி­லக்க வர்த்­த­கத்தை மேலும் அதி­க­ரிக்­கும் வாய்ப்­பு­களை ஏற் ­ப­டுத்­தியிருக்கிறது.

இரு தரப்­பி­லும் புதிய துறை­களில் ஒத்­து­ழைக்­க­வும் புதிய உடன்­பாடு வழி வகுத்­துள்­ளது. இத­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரி­தும் பல­ன­டை­வர்­கள்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் பிரிட்­ட­னின் ஆகப்­பெ­ரிய வர்த்­தக, முத­லீட்­டுப் பங்­கா­ளி­யாக சிங்­கப்­பூர் இருந்து வரு­கிறது. அதே சமயத் தில் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய முத­லீட்டு நாடாக பிரிட்­டன் விளங்­கு­கிறது.

உடன்­பாடு பற்றி பேசிய வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான எஸ். ஈஸ்­வ­ரன், ஏற்­கெ­னவே உள்ள உடன்­பா­டு­க­ளுக்கு மேலாக சில துறை­களில் மேலும் மேம்­பாடு காண முடி­யும் என்­றார்.

மின்­னி­லக்க வர்­த­தக விதி­முறை ­க­ளுக்கு இது உல­க­ளா­விய அளவு­ கோ­ளாக இருக்­கும். இரு நாடு ­க­ளின் மக்­க­ளுக்­கும் வர்­த­த­கங்­க­ளுக்­கும் உடன்­பாடு நன்மை பயக்­கும் என்­றும் அமைச்­சர் ஈஸ் ­வ­ரன் தெரி­வித்­தார்.

பிரிட்­ட­னின் அனைத்­து­லக வர்த்­தத்­திற்­கான அமைச்­சர் ஆன்-மேரி டிரெ­வெ­லி­யன், சிங்­கப்­பூ­ரு­ட­னான இந்த நவீன ஒப்­பந்­தம், உல­கின் இரண்டு அதி­வேக உயர் தொழில்­நுட்ப மையங்­களை இணைக்­கிறது என்று கூறி­னார்.

புதிய ஒப்­பந்­தம், 17 பில்­லி­யன் பவுண்ட் (S$30.6 பில்­லி­யன்) மதிப்­புள்ள வர்­த­தக உறவை ஏற்­ப­டுத்­தி­ உள்­ளது.

கடந்த 2019ல் இரு தரப்பு வர்­த­தக சேவை­கள் $22 பில்­லி­ய­னைத் தாண்­டி­யது. அதில் எழு­பது விழுக்­காடு மின்­னி­லக்க முறை­யில் வழங்­கப்­பட்­டது.