பிரிட்டனுடன் நேற்று கையெழுத்தான புதிய மின்னிலக்க வர்த்தக உடன்பாட்டால் பிரிட்டனிடமிருந்து மலிவான பொருட்கள், சேவைகளை சிங்கப்பூரர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
பிரிட்டனுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அந்த உடன்பாடு அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.
இது, பிரிட்டனின் முதல் மின்னிலக்க உடன்பாடாகவும் ஆசியானுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான முதல் மின்னிலக்க உடன்பாடாகவும் இருக்கும்.
சிங்கப்பூர்-பிரிட்டன் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே மின்னிலக்க வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை ஏற் படுத்தியிருக்கிறது.
இரு தரப்பிலும் புதிய துறைகளில் ஒத்துழைக்கவும் புதிய உடன்பாடு வழி வகுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பலனடைவர்கள்.
தென்கிழக்கு ஆசியாவில் பிரிட்டனின் ஆகப்பெரிய வர்த்தக, முதலீட்டுப் பங்காளியாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. அதே சமயத் தில் சிங்கப்பூரின் முக்கிய முதலீட்டு நாடாக பிரிட்டன் விளங்குகிறது.
உடன்பாடு பற்றி பேசிய வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான எஸ். ஈஸ்வரன், ஏற்கெனவே உள்ள உடன்பாடுகளுக்கு மேலாக சில துறைகளில் மேலும் மேம்பாடு காண முடியும் என்றார்.
மின்னிலக்க வர்ததக விதிமுறை களுக்கு இது உலகளாவிய அளவு கோளாக இருக்கும். இரு நாடு களின் மக்களுக்கும் வர்ததகங்களுக்கும் உடன்பாடு நன்மை பயக்கும் என்றும் அமைச்சர் ஈஸ் வரன் தெரிவித்தார்.
பிரிட்டனின் அனைத்துலக வர்த்தத்திற்கான அமைச்சர் ஆன்-மேரி டிரெவெலியன், சிங்கப்பூருடனான இந்த நவீன ஒப்பந்தம், உலகின் இரண்டு அதிவேக உயர் தொழில்நுட்ப மையங்களை இணைக்கிறது என்று கூறினார்.
புதிய ஒப்பந்தம், 17 பில்லியன் பவுண்ட் (S$30.6 பில்லியன்) மதிப்புள்ள வர்ததக உறவை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ல் இரு தரப்பு வர்ததக சேவைகள் $22 பில்லியனைத் தாண்டியது. அதில் எழுபது விழுக்காடு மின்னிலக்க முறையில் வழங்கப்பட்டது.

