போதையில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்திய ஆடவர்

போதையில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்திய ஆடவர்

2 mins read
f4b1dbaa-7837-4b67-9363-6b6b0d03f9f1
-

பாலி­யல் பலாத்­கார முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட 27 வயது ஆட­வர் அக்­குற்­றச்­சாட்டி லிருந்து விடு­விக்­கப்­பட்­டார். இருந்­தா­லும் மது­போ­தை­யில் இருந்த பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தாக அவர் மீதான குற்­றச்­சாட்டு திருத்தப்பட்டது. இந்­தக் குற்­றச்­சாட்டை 27 வயது வோங் ஷின் சியோங் ஒப்­புக்கொண்­டுள்­ளார்.

ஊன­முற்­றோர்­க­ளுக்­கான கழி­வ­றை­யில் பெண்­ணின் உள்­ளா­டை­களை அவர் அகற்­றி­ய­தாக நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதில் பாதிக்­கப்­பட்ட 27 வயது ெபண் மது­போ­தை­யில் இருந்­த­தால் அவ­ரது உள்­ளா­டை­கள் அகற்­றப்­பட்­ட­து­கூட அவ­ருக்­குத் தெரி­ய­வில்லை.

வேறு ஒரு பெண், மான­பங்­கப்­ப­டுத்­தப்­பட்­டதை போலி­சார் விசா­ரித்­த­போது இவ­ரும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரியவந்­தது. வோங் ஷின் சியோங்­கால் மானப்­பங்­கப் படுத்­தப்­பட்ட இரு பெண்­களும் மது­போ­தை­யில் இருந்­துள்­ள­னர்.

2018 ஏப்­ரல் ரிவேர் வேலி, கிளார்க் கீயில் உள்ள கழி­வ­றை­யில் 27 வயது பெண்ணை பல­வந்­த­மாக வோங், 27, மானப்­பங்­கப்­ப­டுத்­தி­னார். ஸூக் இரவு கேளிக்கை விடு­தி­யில் அந்­தப் பெண்ணை வோங் சந்­தித்­தார். அவரைக் கழி­வ­றைக்கு அழைத்துச் செல்­வ­தற்கு முன்பு உள்­ளா­டை­களை பாதி­ய­ள­வுக்கு இறக்கி அவ­ரது பின்­பு­றத்தை வோங் படம் பிடித்­துள்­ளார்.

டாக்­சி­யில் வீட்­டுக்­குச் சென்­ற­போது கைபே­சியை தவ­ற­விட்­ட­தால் அந்­தப் பெண் கிளார்க் கீக்கு மீண்­டும் திரும்­பி­னார். பின்­னர் பெண்­ணும் வோங்­கும் தனித்­த­னி­யாக பிரிந்­து­சென்­று­விட்­ட­னர்.

என்ன நடந்­தது என்­பது அந்தப் பெண்ணுக்கு சிறிதளவுகூட நினை­வில் இல்லை. பதின்ம வயது பெண் ஒரு­வர் மான­பங்­கப்­ப­டுத்­தப்­பட்­டதை வோங்­கி­டம் விசா­ரித்­த­போது 27 வயது பெண்­ணும் பாதிக்­கப்­பட்­டி­ருப்பதை காவல்­து­றை­யி­னர் கண்டு பிடித்­த­னர். பின்­னர் அந்­தப் பெண்­ணி­டம் போலி­சார் தொடர்பு கொண்டு நடந்த சம்­ப­வத்தை தெரி­வித்­துள்­ள­னர்.

2019 மார்ச் மாதம் விடி­யற்­காலை நடந்த சம்­ப­வத்­தில் பதின்ம வயது பெண்ணை வோங் மானப்­பங்­கப்­ப­டுத்­தி­னார்.

கேளிக்கை விடு­தி­யில் நண்­பர்­க­ளு­டன் குடித்து நேரத்­தைக் கழித்த பிறகு வீடு திரும்­பிக் கொண்­டிந்த பதின்ம வயது பெண் தனி­யாக இருப்­ப­தைக் கண்டு அவ­ரி­டம் பேசி வோங் டாக்­சி­யில் அழைத்­துச் சென்­றுள்­ளார்.

நீதி­மன்ற விசா­ர­ணை­யில் பதின்ம வயது பெண்­ணி­டம் வோங் உட­லு­ற­வு கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அந்­தப் பெண்­ணின் சம்­ம­தத்­து­டன்­தான் உட­லு­ற­வு கொண்­டேன் என்ற வோங்­கின் வாதத்தை நீதி­பதி ஏற்­றுக்­கொள்ள மறுத்­து­விட்­டார்.

அதைத் தீர்­மா­னிக்­கும் வய­தில் பதின்ம வயது பெண் இல்லை என்று நீதி­பதி மேவிஸ் சியோன் குறிப்­பிட்­டார். இரண்டு குற்­றச்­சாட்டு­க­ளை­யும் ஒப்­புக்­கொண்ட வோங்­குக்கு பிப்­ர­வரி 3ஆம் தேதி தண்­டனை விதிக்­கப்­படும்.

மான­பங்­கப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்கு இரண்டு ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி அல்­லது இவற்­றில் ஏதா­வது இரண்டு அல்­லது மூன்று தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம். பாலி­யல் பலாத்­கா­ரத்­துக்கு இரு­பது ஆண்­டு­கள் வரை சிறை, அப­ரா­தம் அல்­லது பிரம்­படி விதிக்­கப்­ப­ட­லாம்.