கொவிட்-19 காப்புறுதி உதவி இவ்வாண்டுடன் நிறுத்தப்படும்

கொவிட்-19 காப்புறுதி உதவி இவ்வாண்டுடன் நிறுத்தப்படும்

1 mins read
93680bb0-37bd-437d-a66f-b10e37999d0e
-

பொது­வான காப்­பு­று­தித் திட்­டங்­களை வழங்­கும் நிறு­வ­னங்­கள், கொவிட்-19 சூழ­லைக் கையாள தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் தரும் உத­வியை இம்­மா­தம் 31ஆம் தேதிக்­குப் பிறகு நிறுத்­திக்­கொள்ளும் என்று ஜிஐஏ எனப்­படும் பொதுக் காப்­பு­று­திச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. காப்புறுதி நிறுவனங்கள் வழங்கி­வ­ரும் உதவி­யின்­கீழ் தங்­க­ளின் காப்­பு­று­தித் திட்­டங்­க­ளுக்­கான சந்தா தொகை­யைச் செலுத்­த கிரு­மிப் பர­வல் சூழ­லால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குக் கூடு­தல் கால அவ­கா­சம் வழங்கப்­படும்.

எனி­னும், ஏற்­கெ­னவே இத்­த­கைய நீக்­குப்­போக்­கான காப்­பு­று­தித் திட்­டங்­களை வைத்­தி­ருந்­தோ­ருக்கு அவற்­றின் காலம் முடி­யும்­வரை உதவி தொடர்ந்து வழங்­கப்­படும். அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி முதல் கிரு­மிப் பர­வல் சூழ­லால் பாதிக்­கப்­பட்­டுள்ள சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மாற்று ஏற்­பா­டு­கள் அல்­லது உதவி குறித்து தங்­ளுக்­குக் காப்­பு­று­தித் திட்­டங்­களை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் கலந்து ஆலோ­சிக்­க­லாம். இம்­மா­தம் 31ஆம் தேதி­வரை தொடர்ந்து நீக்­குப்­போக்­கான காப்­பு­று­தித் திட்­டங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

"கிரு­மிப் பவ­லைச் சகித்­துக்­கொண்டு வாழும் நிலையை நோக்கி சிங்­கப்­பூர் சென்று கொண்டி­ருப்­ப­தால் தொடர்ந்து மாறிக்­கொண்டே இருக்­கும் இச்­சூ­ழ­லைச் சமா­ளிக்க வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க நாங்­கள் என்­றும் தய­ாராய் இருப்­போம்," என்று பொதுக் காப்­பு­று­திச் சங்­கத்­தின் தலை­வர் கிரெய்க் எல்­லிஸ் கூறி­னார்.