கழிவறையில் 5 வயதுச் சிறுமியின் விரல் துண்டிக்கப்பட்டது

கழிவறையில் 5 வயதுச் சிறுமியின் விரல் துண்டிக்கப்பட்டது

2 mins read
95b70e5a-89d5-4265-9e6a-b621b7a6b143
தம் மகளுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தைப் பற்றி ஃபேஸ்புக் தளம் வழியாக சிறுமியின் தந்தை திரு சியா பகிர்ந்துகொண்டார். படங்கள்: ஃபேஸ்புக் -
multi-img1 of 2

அயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­தி­யின் கழி­வ­றை­யில் ஐந்து வயது சிறுமி தனது கைக­ளைக் கழு­வி­விட்டு அவற்­றைக் காய­வைத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, அந்த இயந்­தி­ரத்­தில் விரல் சிக்­கித் துண்­டானது. திங்­கட்­கி­ழமை இரவு நடந்த இச்­சம்­ப­வத்­தின்­போது அச்­சி­றுமி, தம்­மு­டைய இல்­லப் பணிப்­பெண் மற்­றும் ஒன்­பது வய­தி­லான இரட்டை சகோ­த­ரி­க­ளு­டன் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

கழி­வ­றை­யி­லி­ருந்து அல­றல் சத்­தம் கேட்­ட­போது சிறு­மி­யின் தந்­தைக்கு ஏதோ அசம்­பா­வி­தம் நடந்து­விட்ட உணர்வு ஏற்­பட்­டது.

மக­ளுக்கு ஒரு விரல் போய்­விட்­டது என்று பணிப்­பெண் அவ­ரி­டம் வந்து சொல்ல, குடும்­பத்­தினர் அனை­வ­ரும் கழி­வ­றைக்­குள் ஓடி­னர். அங்கு காரா என்ற அந்­தச் சிறுமி, தமது கையைப் பிடித்­த­வாறு அல­றிக்­கொண்­டி­ருந்­தார்.

இது­வரை சிறு­மிக்கு இரு முறை அறுவை சிகிச்சை நடந்­து­விட்­ட­தாக தந்தை திரு சியா தெரி­வித்­தார். இத­னால் இடது ஆள்­காட்டி விரல் இருக்­க­வேண்­டிய இடத்­தில் வெறும் தட்­டை­யாக உள்­ளது.

விர­லில் கட்­டு­டன் சிறுமி மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளார். அத்­து­டன் வலி­யைப் போக்க மருந்­தும் உட்­கொண்டு வரு­கி­றார். தங்­க­ளின் மக­ளது மன­ந­லன் குறித்து தற்­போது அவ­ரின் பெற்­றோர் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர். அடுத்து என்ன செய்­வது என்­பதை இரு­வ­ரும் ஆலோ­சித்து வரு­கின்­ற­னர்.

"தைரி­ய­மாக இருப்­ப­து­போல் தன்­னைக் காட்­டிக்­கொள்­கி­றார். அவ­ரின் கையைப் பின்­னால் மறைத்­துக்­கொள்­கி­றார். நடந்­தது அவ­ருக்கு இன்னும் முழு­மை­யாக விளங்­க­வில்லை," என்று திரு சியா தம் மக­ளைப் பற்றி கூறி­னார்.

கழி­வ­றை­யில் கைகளை உலர்த்­தும் இயந்திரம் இயங்­கி­ய­போ­தும் அதன் காற்­றோட்ட மூடி­யைக் காண­வில்லை என்று மூன்று மகள்­கள், எட்டு வயது மகனுக்குத் தந்­தை­யான திரு சியா குறிப்­பிட்­டார்.

சாத­னம் பொருத்­தப்­பட்ட பகு­தி­யைத் திறப்­ப­தற்­கான சாவி­யைக் கடைத்­தொ­கு­தி­யின் பணி­யா­ளர்­களால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அத­னால் துண்டான சிறு­மி­யின் விரல் பகு­தி­களை எடுப்­ப­தற்­காக பணி­யா­ளர்­கள் தங்­கள் கைக­ளால் அதைத் திறக்க வேண்­டி­யி­ருந்­தது என்று திரு சியா கூறி­னார்.

கைக­ளைத் துடைப்­ப­தற்­கான திசுத் தாளை எடுப்­ப­தாக நினைத்து சிறு பிள்­ளை­கள் தவ­று­த­லா­கத் தங்­க­ளின் கைக­ளைச் சாத­னத்­திற்­குள் விட்டு காய­ம­டை­ய­லாம் என்று குறிப்­பிட்­டார் திரு சியா. சம்­ப­வத்தை அடுத்து சாத­னத்தை மாற்றி­விட்­ட­தா­கக் கடைத்­தொ­குதி பேச்­சா­ளர் தெரி­வித்­தார். அத்­து­டன் சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரிப்­ப­தா­க­வும் கூறி­னார்.