சிங்கப்பூரின் சமூகச் சூழலை மக்கள் உணர வேண்டும்

சிங்கப்பூரின் சமூகச் சூழலை மக்கள் உணர வேண்டும்

2 mins read
363bbb80-45b2-4930-8bb3-427ed8aa441b
-

பன்­மு­கக் கலா­சா­ரம், நல்­லி­ணக்­கம் ஆகிய அம்­சங்­களில் சிங்­கப்­பூர் எந்­நே­ர­மும் கவ­னம் செலுத்தி வரு­கிறது. இருப்­பி­னும், இணை­யம், சமூக ஊட­கங்­கள் வழி, வெளி­நாடு­களில் நடப்­பவை மின்­னல் வேகத்­தில் நம்மை வந்­த­டை­கின்­றன என்­றார் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது.

வெளி­நா­டு­களில் நடப்­பவை முத­லில் நமது அனு­ப­வங்­க­ளுக்­கும் நாட்­டின் சமூ­கச் சூழ­லுக்­கும் ஏற்ப உள்­ளதா என்­பதை ஆராய்ந்த பின்­னர் அவற்றை இங்கு பின்­பற்­ற­லாம் என்­றார் அவர்.

"வெளி­யில் சென்று மற்­ற­வர்­களின் கலா­சா­ரங்­க­ளை­யும் பார்­வை­க­ளை­யும் அறி­யும் நிலை­யில், ஆவ­ணங்­களை வாசிக்­கும்­போது கோட்­பா­டு­கள், மாதி­ரி­கள், கட்­ட­மைப்­பு­கள் ஆகி­ய­வற்றை நாம் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­றோம் என்­ப­தில் கவ­ன­மாக இருப்­பது முக்­கி­யம்," என்­றார் திரு ஸாக்கி.

வரு­டாந்­திர நிகழ்­வாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட 'ஒன்­பீ­ப்பிள்.எஸ்ஜி மாடல் யுனை­டெட் நேஷன்ஸ்' தொடக்க விழா­வில் இனங்­க­ளின் உற­வு­கள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் திரு ஸாக்கி பேசி இருந்­தார்.

'பிளேக் லைஃப்ஸ் மேட்­டர்' போன்ற சமூக இயக்­கங்­கள் ஏன் வெளி­நா­டு­களில் உரு­வா­கின என்­பதை மதிப்­பி­டு­வது முக்­கி­யம் என்­றார் அவர்.

"இணை­யத்­தில் நீங்­கள் படிக்­கும் பல­வற்­றி­லி­ருந்து மாறு­பட்ட ஒரு சூழ­லில் நாம் இருக்­கி­றோம்," என்று அவர் சொன்­னார்.

தாம் மலாய் இனத்­த­வர் என்­ப­தால் காற்­பந்து விளை­யா­டு­வ­தில் திற­மை­சாலி என்­றும் தமது தோல் ஏன் வெளுப்­பாக உள்­ளது என்­றும் சிலர் தம்­மைக் கேட்­டி­ருப்­பதை அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

"அறி­யாமை, கலா­சார வேறு­பாடு­களை அறி­யா­மல் இருப்­ப­தைத் தான் நான் கார­ண­மா­கக் கூறு­வேன். மற்ற கலா­சா­ரங்­க­ளை­யும் நம்­பிக்­கை­க­ளை­யும் அறிந்­து­கொள்­வ­தில் நாம் மேலும் ஆர்­வம் காட்­ட­லாம்," என்­றார் அமைச்­சர் ஸாக்கி. இருப்­பி­னும் தொடர்ந்து தீங்கு விளை­விக்­கும் செய­லில் ஈடு­படும் ஒரு சில­ரைப் பொறுத்துக்­கொள்ள முடி­யாது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"இனங்­க­ளுக்கு இடை­யி­லான உறவை நாம் மேம்­ப­டுத்­திக்­கொள்ள, பல­த­ரப்­பட்ட நமது இன, சம­யச் சமூ­கங்­க­ளு­டன் மேலும் ஆழ­மான தொடர்­பு­களை நாம் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்று குறிப்­பிட்­டார் அமைச்­சர் ஸாக்கி.

சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளி­டையே இன, சமய நல்­லி­ணக்­கத்தை ஊக்கு­விப்­ப­தற்­காக 'ஒன்­பீ­ப்பிள்.எஸ்ஜி மாடல் யுனை­டெட் நேஷன்ஸ்' அமைப்பு 2015ஆம் ஆண்­டில் அமைக்­கப்­பட்­டது.

ஏழா­வது ஆண்­டாக நடை­பெறும் இம்­மூன்று நாள் நிகழ்­வில் இவ்­வாண்டு 300க்கும் மேற்­பட்ட உயர்­நி­லைப்­பள்ளி, உயர்­கல்வி நிலைய, மத­ராசா பள்ளி மாண­வர்­கள் பங்­கேற்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.