குற்றவாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் திட்டம்

குற்றவாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் திட்டம்

1 mins read
80be492c-9e49-4c49-b1df-ed479c0c8c94
-

சட்டத்தை ஏன் மீறினோம், மீண்டும் குற்றம் புரிவதை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பில் குற்றம் புரிவோருக்கு உதவி நல்கும் திட்டத்தின் வழி 602 பேர் பலனடைந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இவ்வாண்டு நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நபர்களைக் காவல் துறையினர் அடையாளம் கண்டு திட்டத்தின் படி தகுந்த உதவியைக் கிடைக்கச் செய்தனர். நிதி உதவி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்கள் தொடர்பில் அந்தந்த அமைப்புகளின் உதவியையும் அதிகாரிகள் நாடி குற்றம் புரிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டினர். பெரும்பாலும் குடும்ப வன்முறை, கடை புகுந்து திருட்டு, சட்டவிரோத சூதாட்டம் ஆகியவற்றின் தொடர்பில் இந்த நபர்கள் குற்றம் புரிந்திருந்தனர் என்று கூறப்பட்டது. இத்திட்டத்தால் குறித்த நேரத்தில் குற்றவாளிகளின் குடும்பத்தாருக்கும் உதவி கிடைப்பதாகக் கூறப்பட்டது.