பல்வேறு குற்றம் புரிந்த இந்திய பெண்ணுக்குச் சிறை

பல்வேறு குற்றம் புரிந்த இந்திய பெண்ணுக்குச் சிறை

1 mins read
0d35a33f-ef45-4204-9637-d3535395e707
-

கொவிட்-19 ஆத­ரவு மானி­யத்­தில் இ­ருந்து தொகை கோரும் நோக்­கில் தான் வேலை­யி­லி­ருந்து நிறுத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கும் போலி ஆவ­ணம் ஒன்றை 48 வயது ராஜ­கோ­பால் மாலினி தயா­ரித்­தார்.

மேலும், அவர் வேலை பார்த்த கூட்­டு­ரிமை வீட்டு குடி­யி­ருப்­பா­ளர்­கள், பரா­ம­ரிப்­புக்­காக தந்த பணத்­தை­யும் அவர் கையா­டி­னார்.

அத்­து­டன், திரு­டப்­பட்ட கடன் அட்டையைக்­கொண்டு கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் மாலினி தன்­னு­டைய பிள்­ளை­கள், நண்­பர்­களு­டன் கடை கடை­யா­கச் சென்று பொருள்­கள் வாங்­கி­யி­ருந்­தார்.

பல்­வேறு குற்­றம் புரிந்த மாலி­னிக்கு நேற்று 16 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கூட்­டு­ரிமை வீட்­டு­வா­சி­க­ளி­ட­மி­ருந்து மாலினி கிட்­டத்­தட்ட $4,000க்கும் மேற்­பட்ட தொகை­யைக் கையா­டி­ய­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. கடன் அட்­டை­யைக் கொண்டு வாங்­கிய பொருள்­க­ளின் மதிப்பு $13,500க்கும் மேலா­னது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மாலினி தன்­னு­டைய மகள்­களு­ட­னும் தன்­னு­டைய பிள்­ளை­களின் நண்­பர்­க­ளு­ட­னும் நெக்ஸ் கடைத்­தொ­கு­திக்­குச் சென்று கைப்­பே­சி­கள், கடி­கா­ரங்­கள், கால­ணி­கள் உள்­பட பல பொருள்­களை அந்­தக் கடன் அட்­டை­யைக் கொண்டு வாங்­கி­னார்.

தன் பிள்­ளை­கள் மீது அன்­பைப் பொழி­யவே வசதி குறைந்த மாலினி இவ்­வாறு செய்­த­தாக அவ­ரின் வழக்­க­றி­ஞர் கூறி­னார்.