தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள்: தீவு முழுவதும் 63 பேர் கைது

2 mins read
eee6132f-15f0-4658-9669-e44f0e50d842
-

போதைப்பொருள் புழங்கியதாக 17 வயது இளையரும் பிடிபட்டார்

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) அதி­கா­ரி­கள் தீவு முழு­வ­தும் நடத்­திய சோத­னை­யில் 63 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இச்­சோ­தனை நட­வ­டிக்கை கிள­மெண்டி, ஹவ்­காங் மற்­றும் பொங்­கோல் கடந்த புதன்­கி­ழமை (டிசம்­பர் 8) முதல் வெள்­ளிக்

கிழமை வரை நீடித்­தது.

இவர்­களில் 17 வயது சிங்­கப்­பூர் இளை­யரே ஆக வய­து­கு­றைந்­த­வர்.

போதைப்­பொ­ருள் புழங்­கிய சந்­தே­கத்­தின் பேரில் அவர் பிடி­பட்­டார்.

கைது செய்­யப்­பட்ட அனை

வரி­ட­மும் பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள்­க­ளின் மதிப்பு $70,500க்கும் மேல் இருக்­கும் என மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

209 கிராம் ஹெரா­யின், 299 கிராம் ஐஸ், 733 கிராம் கஞ்சா, 10 கிராம் கெட்­ட­மின் போன்­றவை அவற்­றுள் அடங்­கும்.

தீவு முழு­வ­தும் நடத்­தப்­பட்ட சோத­னை­கள் தொடர்­பாக சிஎன்பி விளக்­கி­யது.

அங் மோ கியோ ஸ்தி­ரீட் 22 வட்­டா­ரத்­தில் அதி­கா­ரி­கள் தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது 59 வயது ஆட­வர் புதன்­கி­ழமை பிற்­ப­கல் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­ட­மி­ருந்து 197 கிராம் ஹெரா­யின் கைப்­பற்­றப்­பட்­ட­தாக சிஎன்பி கூறி­யது.

அதன் பின்­னர் அதே வட்­டா­ரத்­தில் அதே நாளில் 61 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார். போதைப்­பொ­ருள் புழங்­கிய சந்­தே­கத்­தின்­பே­ரில் அவர் பிடி­பட்­டார்.

பின்­னர் புதன்­கி­ழமை மாலை பாலஸ்­டி­யர் ரோட்­டில் உள்ள ஓர் ஹோட்­ட­லின் அறை­யில் சிஎன்பி அதி­கா­ரி­களும் காவல்­து­றை­யி­ன­ரும் இணைந்து நடத்­திய சோத­னை­யில் 27 வயது ஆட­வ­ரும் 23 வய­துப் பெண்­ணும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதே ஹோட்­ட­லில் மேலும் இரு ஆட­வர்­கள் பிடி­பட்­ட­னர். 24 மற்­றும் 26 வய­து­டைய அந்த இளை­யர்­க­ளின் வாக­னங்­களில் ரொக்­கப் பண­மும் போதைப்­பொ­ருள்­களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரி­ட­மும் விசா­ரணை தொடர்­வ­தாக சிஎன்பி நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.