பொதுவாக உயிரை அச்சுறுத்தும் நோய் அல்லது உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் நிலைமை மோசமாகக்கூடிய காயம் போன்ற அவசரநிலை சம்பவங்களுக்கு மட்டுமே 995 எனும் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இது போன்ற சம்பவங்கள் சுவாசம் அல்லது உயிரோட்டத்தைப் பாதிக்கக்கூடும். கீழ் காண்பவை சில உதாரணங்கள்:
• பக்கவாதம்
• உயரத்திலிருந்து விழுதல்
• நீருக்குள் மூழ்குதல்
• மூச்சுத்திணறல்
• மயக்க நிலை அல்லது சுயநினைவற்ற நிலை
• அதிக ரத்தம் கசியும் ஆழ்ந்த காயங்கள்
• கடுமையான தீக்காயங்கள் அல்லது மின்சாரம், மின்னல் தாக்குதல்
• விஷம் உட்கொள்ளுதல்
• மோசமான ஒவ்வாமை,
• எலும்பு முறிவு
• அவசரநிலை பிரசவம்
மாறாக அவசரமில்லா நிலைகளில் உடனடி சிகிச்சை இல்லை என்றாலும் மரணமோ மோசமான நிலையோ உருவாகுவதில்லை.இச்சம்பவங்களில் சுய மருத்துவ உதவி செய்துகொள்ளலாம் அல்லது ஏதேனும் ஒரு மருந்தகத்தில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். கீழ் காண்பவை சில உதாரணங்கள்:
• பல்வலி
• தூக்கமின்மை
• சிறு காயங்கள், வெட்டுகள்
• லேசான தலைவலி
• வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்

