காலத்திற்கு ஏற்ற கைத்திறன்; கைகொடுக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர்

காலத்திற்கு ஏற்ற கைத்திறன்; கைகொடுக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர்

4 mins read
835ed831-3d3f-4eb0-bb91-fe043979d384
-

கைத்­தொ­ழி­லைத் திறம்­பட கற்று அதைக் காசாக்கி வாழும் ஊழி­யர்­கள் எப்­போ­துமே காலத்­திற்கு ஏற்ற வர்களாக இருந்து வர­வேண்­டி­யது மிக முக்­கிய மானது. கால ஓட்­டத்திற்கு, மாற்றத்திற்கு ஏற்ப பொரு­ளி­யலின் பல்­வேறு துறை­களும் தொடர்ந்து உரு­மா­றிக்­கொண்­டே­தா­ன் இருக்­கும்.

ஆகைல் ஊழியர்­கள் காலத்­திற்கு ஏற்ற தேர்ச்சி, திறமை, ஆற்­றல் கெட்­டிக்­கா­ரத்­த­னத்­துடன் எப்­போ­துமே தங்­க­ளுக்­குத் தேவை இருக்­கும் வகை­யில் இருந்து வந்­தால்தான் அனு­கூ­ல­மான முறையில் வேலை­யைத் தக்­க­வைத்­துக்கொண்டு கண்­ணி­ய­மான முறை­யில் கடை­சி­வரை காலம் தள்ள முடியும்.

இப்­போ­தைய உல­கம் கொவிட்-19 பிடி­யில் இருக்­கிறது. இன்­ன­மும் விடு­பட்டு வெளியே வர இய­ல­வில்லை. உல­கையே புரட்­டிப்­போ­ட்டு­விட்ட அந்­தக் கிருமி, ஊழி­யர்­கள் இது­நாள்­வரை வேலை செய்து வந்த விதத்­தை­யும் பாணி­யை­யும் மாற்றி இருக்கிறது.

தொழில்துறை­களை இன்­ன­மும் தலை­எடுக்க விடாமல் செய்துவிட்டது. இது­நாள்வரை இருந்துவந்த பல வேலைகள் இனி­யும் இருக்­காது என்ற ஒரு­ நி­லை­யும் ஏற்­பட்டு­விட்­டது.

வீட்­டில் இருந்தே வேலை பார்க்கும் பாணி நிரந்­தரமாகக்­கூ­டிய சூழ­லும் வரக்கூடும் என்பது பற்றி­யும் உல­கம் சிந்­திக்­கத் தொடங்கிவிட்டது.

குறிப்­பிட்ட வேலை­கள் மறைந்­து­வி­டும் என்ற சூழல் ஒரு பக்­கம் இருக்­கை­யில், பொரு­ளி­ய­லில் எந்தெந்த துறை­கள் எந்த அள­வுக்கு ஆதிக்­கம் செலுத்­தும் என்­ப­தி­லும் குறிப்­பி­டத்­தக்க வேறு­பாடு­கள், மாற்றங்கள் இருக்­கும் போல் தெரி­கிறது.

இப்­படிப்­பட்ட சூழ­லில், எதிர்­கா­லத்­தில் எந்தத் துறைக்கு எந்த அள­வுக்­குத் தேவை கூடும், எந்தத் துறைக்கு என்ன என்ன புதிய ஆற்­றல்­கள், தேர்ச்சி­கள், திற­மை­கள் தேவைப்­ப­டக்­கூ­டும் என்­ப­தைத் துல்­லி­ய­மா­கக் கணித்­துச் செயல்­ப­ட­வேண்­டிய மிக முக்­கி­ய­மான தேவை இருக்­கிறது என்­பதை ஊழியர்­கள் முத­லில் உண­ர­வேண்­டும்.

இதில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­த­வேண்­டிய காலம் இது என்ற உண்மை நில­வ­ரத்தை அவர்­கள் அங்­கீ­க­ரித்து ஏற்றுக்­கொள்­ள­வேண்­டும்.

தங்­க­ளின் இப்­போ­தைய தேர்ச்­சி­கள் வரும் காலத்­திற்­குப் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் என்ற நம்­பிக்கை 64.5 விழுக்­காட்டு ஊழி­யர்­க­ளி­டம் அவ்­வ­ள­வாக இல்லை என்­பது அண்­மைய ஓர் ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

தங்­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­திக் கொண்டாக வேண்­டும் என்­பதை ஊழியர்கள் புரிந்­து­கொண்டு இருக்கிறார்­கள்; தங்க­ளி­டம்­ இப்­போது இருக்­கும் தேர்­ச்சிகள் போதாது என்று அவர்­கள் கரு­து­கிறார்­கள் என்பதை அந்த ஆய்வு காட்டி உள்ளது.

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ள் காலத்திற்கு ஏற்ற புதிய தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு நிதி உத­வி­யுடன் உதவிக்கரம் நீட்டி உறுதுணையாக இருந்துவரும் ஸ்கில்ஸ்ஃபியூச்­சர் சிங்­கப்­பூர் இயக்­கம், இதன் தொடர்பில் இப்­போது ஊழி­யர்­களை விழிப்­பூட்டி இருக்­கிறது. அந்த அமைப்பு 'வருங்­கால பொருளி­ய­லுக்­கான தேவை அறிக்கை' என்ற அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டு உள்­ளது.

பெரு­ளி­ய­லின் 23 துறை­க­ளை­யும் அந்த அறிக்கை உள்­ள­டக்­க­வில்லை என்­றா­லும்­கூட சிங்­கப்­பூ­ரில் அடுத்த மூன்று ஆண்­டு­களில் மிக முக்­கிய இடத்தைப் பிடிக்­கும் மூன்று துறை­களை அடைளம் கண்டு, அந்தத் துறை­களில் எந்தெந்த தேர்ச்­சி­கள் தேவைப்­படும் என்­பதை அந்த அமைப்பு வரை­யறுத்து உள்­ளது. ஊழி­யர்­கள் தங்­கள் கவ­னத்­தைத் திருப்ப வேண்­டிய அவ­சர தேவை உள்ள தேர்ச்­சி­களை 20 தொகுப்­பு­க­ளா­க அது தொகுத்து உள்­ளது.

மின்­னி­லக்­கம், பசுமை, பரா­ம­ரிப்பு ஆகிய மூன்று துறை­களும் சிங்­கப்­பூ­ருக்கு மிக முக்­கி­ய­மான துறை­கள் என்று குறிப்­பிட்டு இருக்­கும் அந்த அறிக்கை, அந்­தத் துறை­களில் ஊழி­யர்­கள் நல்ல வேலை­களைப் பெறு­வ­தற்குத் தேவைப்படும் தேர்ச்­சி­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்தி இருக்­கிறது.

ஊழி­யர்­கள் இதுநாள்வரை தாங்­கள் பெற்­றுள்ள அனு­ப­வ­மும் தேர்ச்சியும் ஆற்­ற­லும் விருப்­பங்­களும் வருங்­கா­லத்­தில் எந்த அள­வுக்கு ஏற்­பு­டை­ய­தாக இருக்­கும் என்­பதைத் தெரிந்­து­கொள்ள அந்த அறிக்கை வழி­காட்டி உத­வக்­கூ­டி­ய­தாக இருக்­கிறது.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லைப் பொறுத்­த­வரை, பொரு­ளி­ய­லின் அனைத்து துறை­களும் உரு­மாறு­வதால் மின்­னி­லக்­கம் என்­பது ஏறக்­குறைய எல்லா துறை­க­ளுக்­குமே அவ­சி­ய­மா­ன­தாக ஆகி­விட்­டது.

இந்­தத் துறை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்­பு­களை ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கிறது.

பசு­மைப் பொரு­ளி­ய­லைப் பொறுத்­த­வரை, அதனுடைய 17 பிரி­வு­களில் உருவாகக்­கூ­டிய வேலை­களுக்குத் தேவைப்படக்கூடிய, தவிர்க்க இயலாத தேர்ச்சி­களை அறிக்கை சுட்டி இருக்­கிறது.

மற்றொரு துறை பராமரிப்பு. சிங்­கப்­பூ­ரின் மக்கள்­தொகை மூப்­ப­டை­கிறது. இளம் பெற்­றோர்­க­ளின் பிள்­ளை­க­ளைப் பரா­ம­ரிக்க வேண்­டிய தேவை கூடு­கிறது. வேலை பாணி மாறு­கிறது.

சுகா­தா­ரத் துறை­யில் தொலை­தூர சிகிச்சை போன்ற புதுப்­புது பாணி­கள் தலை­யெ­டுக்­கின்­றன.

இவை எல்­லாம் ஏற்புடைய, பொருத்­த­மான தேர்ச்சி ­க­ளைக் கொண்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான தேவையை அதி­கரிக்­கிறது.

சிங்கப்பூரர்கள் அனு­கூ­ல­மான வேலையைப் பெற வேண்­டு­மா­னால் அவர்­கள் பயிற்­சி­களில் தொடர்ந்து ஒரு­மித்த கவ­னம் செலுத்தி வர­வேண்­டும். அதன் மூலம் தங்­கள் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­திக்­கொண்டு வர­வேண்­டும். இதுவே அவர்­க­ளின் இப்போதைய தொடக்க முயற்சிக இருக்­க­வேண்­டும்.

பொரு­ளி­யல் சூழ்­நிலை மந்­த­மாக இருக்­கும்­போது அந்­தக் காலத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சிறந்த வருங்காலத்திற்கு ஊழி­யர்­களை ஆயத்­த­மாக்­கு­வதே சிங்­கப்­பூ­ரின் அணு­கு­முறைக இருந்து வந்துள்ளது. அந்த அணு­கு­முறையே கொவிட்-19 தொற்று ஏற்­ப­டுத்தி இருக்­கும் இப்போ­தைய பாத­க­மான கால­கட்­டத்­தி­லும் தொடர்­கிறது.

இதில் மிக முக்­கி­ய­மா­னது சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் ஒத்­து­ழைத்து விரும்­பிய பலனை எட்­ட­வேண்டும். ஊழி­யர்­கள் புதிய தொழில்­நுட்­பங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும். அதே­போல பயிற்சி வழங்­கு­வோ­ரும் தங்கள் பாடத்­திட்­டங்­களை மேம்­படுத்­திக்­கொண்டு, கற்­றுக்­கொள்­ப­வர்­க­ளின் தேவை­களைக் கருத்­தில்­கொண்டு செயல்­பட வேண்­டும்.

முத­லா­ளி­கள் தங்­களு­டைய புதிய தொழில் பாணி­களை, முன்­மா­தி­ரி­களைச் சூழ்­நி­லை­கேற்ப விரை­வாகக் கைக்­கொள்­ள­வேண்­டும்.

இப்­படிப்பட்ட ஒரு நிலையில், பாத­கத்­தைச் சாதகமாக்கிக் கொண்டு, காலத்­திற்­கேற்ற வகை­யில் மேம்பட்டு, எப்­போ­துமே தங்­க­ளுக்குத் தேவை இருக்­கிறது என்­பதை ஊழியர்கள் உறு­திப்­படுத்திக்­கொள்­ள­வேண்டும். இதற்கான வாய்ப்பு இப்போது ஸ்கில்ஸ்ஃபியூச்­சர் மூலம் கைகூடிவருகிறது.