'இன ரீதியிலான குற்றங்களைக் கையாளும் புதிய சட்டம் நல்லிணக்கத்திற்கு உதவும்'

'இன ரீதியிலான குற்றங்களைக் கையாளும் புதிய சட்டம் நல்லிணக்கத்திற்கு உதவும்'

2 mins read
edb2079e-25d4-4c78-b500-e39a37d3c670
-

இன ரீதி­யி­லான குற்­றங்­களைக் கையா­ளு­வ­தற்­காக உரு­வாகி வரும் சட்­டம், சிங்­கப்­பூ­ரில் பல கலா­சாரங்­ க­ளுக்கு இடை­யில் நல்­லி­ணக்­கத்­தைப் பலப்­ப­டுத்­தும் என்று முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்துள்ளார்.

மலாய்/முஸ்­லிம் உள்­ளிட்ட இங்­குள்ள சமூ­கங்­கள் செய்து வரும் தியா­கங்­க­ளி­னால் பல இன நல்லிணக்­கம் தொடர்ந்து பேணி பலப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளதை அவர் சுட்­டி­னார்.

'இன நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டம்' என்ற அந்­தப் புதிய உத்தேச சட்­டம் இப்­போது உரு­வாக்­கப்­பட்டு வரு­கிறது.

பிர­த­மர் லீ சியன் லூங் கடந்த ஆகஸ்ட்­டில் தேசிய நாள் பேர­ணி­யில் அது பற்றி அறி­வித்­தார்.

வெவ்­வே­றான இனக் குழுக்­களுக்கு இடை­யில் சகிப்­புத்­தன்மை­யை­யும் மித­வாத போக்­கை­யும் ஊக்­க­மூட்­டு­வது அந்­தப் புதிய சட்டத்­தின் நோக்­கம்.

இனப் பிரச்­சி­னை­களைக் கையா­ளக்­கூ­டிய இப்­போ­தைய எல்லா சட்­டங்­க­ளை­யும் ஒன்­று­தி­ரட்டி புதிய சட்­டம் உரு­வாக்­கப்­படும்.

மலாய்/முஸ்­லிம் தலை­வர்­களுடன்­கூ­டிய ஒரு பேட்­டி­யில் திரு மச­கோஸ் இந்த விவ­ரங்­க­ளைத் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தார்.

தேசிய தினப் பேர­ணி­யில் பிர­த­மர் இது பற்றி குறிப்­பிட்­டது, இதன் தொடர்­பில் அவர் எந்த அள­வுக்கு அக்­க­றை கொண்டு இருக்­கி­றார் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கிறது என்­றும் திரு மச­கோஸ் கூறினார்.

இங்­குள்ள சமூ­கங்­கள் செய்­துள்ள தியா­கங்­க­ளின் கார­ண­மாக எல்­லா­ருக்­கு­மான பொது­வான வாய்ப்­பு­கள் உரு­வாக உதவி கிடைத்­து வந்துள்­ளது என்­பதையும் அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் இன, சமய பார­பட்­சத்­திற்கு இடம் கிடை­யாது என்று சமூக, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரு­மான திரு மச­கோஸ் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.