11 மாதங்களில் 43 சன்னல்கள் கீழே விழுந்த சம்பவங்கள்

11 மாதங்களில் 43 சன்னல்கள் கீழே விழுந்த சம்பவங்கள்

1 mins read
8dcf1c91-3903-4cc5-8ee4-4da3dc835f85
-

சிங்­கப்­பூர் முழு­வ­தும் இந்த ஆண்டு ஜன­வரி முதல் நவம்­பர் வரை சன்னல் பகு­தி­கள் கீழே விழுந்­த­ 43 சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்­தச் சம்­ப­வங்­களில் யாரும் காயம் அடை­ய­வில்லை.

அவற்­றில் பாதி சன்­னல்­கள் மூடி திறக்­கும் கத­வு­க­ளைக் கொண்­டவை. 16 சன்­னல்­கள் தள்­ளித் திறந்து மூடும் கத­வு­களைக் கொண்­டவை. மற்­றவை இதர வகை சன்­னல்­கள் என்று கட்­டட, கட்­டு­மான ஆணை­ய­மும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் நேற்று தெரி­வித்­தன.

இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்­தில் 49 ஆக இருந்­தது.

திறந்து மூடும் சன்­னல்­களில் போடப்­பட்டு இருந்த அலு­மி­னி­யம் திரு­கா­ணி­கள் துரு­ப்பி­டித்­து­விட் டதே கத­வு­கள் கழன்­று­விழ முக்­கிய கார­ணம். இந்த ஆணி­களை அகற்றிவிட்டு பதி­லாக துரு­ப் பிடிக்­காத எஃகு ஆணிகளைப் பொருத்த வேண்­டும் என்று இந்த ஆணை­யம் 2004 முதல் உத்­தரவு­க­ளைப் பிறப்­பித்துள்ளது.

தள்ளு கத­வு­க­ளைக் கொண்ட சன்­னல்­களில் தாங்­கும் சட்­டங்­களின் பிடி­மான பாது­காப்­புச் சாத­னங்­கள் சரி­யில்­லா­மல் போன­தால் அதை­விட்டு கத­வு­கள் வெளியே கழன்று வந்து கீழே விழுந்­து­விட்­டன. பழு­தா­கி­விட்ட சன்­னல் பகுதி களைச் சோதித்து அவற்றை மாற்­றும்­படி இந்த அமைப்­பு­கள் வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறின.