குற்றங்களை ஒடுக்க புதிய சமூகத் திட்டம்

2 mins read
821de18d-e51e-47f6-bb02-fffafc50d914
'சுற்­றுக்­கா­வ­லில் குடி­மக்­கள்' திட்­டத்­ தொண்டூழியர் பிர­காஷ் குல­சே­கர். படம்: பிரகாஷ் -

சிங்­கப்­பூ­ரில் புதிய சமூக குற்­றச்­செயல் தடுப்பு செயல்­திட்­டம் நேற்று தொடங்­கி­யது.

காவல்­து­றை­யின் 'சமூக கண்­கா­ணிப்­புத் திட்­டம்' என்ற அந்­தத் திட்­டம் அக்­கம்­பக்க கண்­கா­ணிப்பு மண்­ட­லம், வாகன கண்­கா­ணிப்பு, வாகன ஓட்­டு­நர் கண்­கா­ணிப்பு போன்ற இப்­போதைய கண்­காணிப்புக் குழுக்­களை ஒருங்­கிணைக்கும்.

குற்­றச்­செ­யல் பற்­றிய எச்­ச­ரிக்கை­களைச் சுடச்­சுட தெரிந்­து­கொள்ள விரும்­பு­வோ­ரும் காவல்­து­றை­யி­டம் குற்­றச்­செ­யல் பற்­றிய தக­வல்­களைத் தெரி­விக்க விரும்­பு­வோ­ரும் அந்­தச் செயல்திட்­டத்­தில் சேர்ந்­து­கொள்­ள­லாம். அந்­தத் திட்­டத்­தின்­கீழ், தொண்டூ­ழி­யர்­க­ளுக்குப் பல்­வேறு தக­வல்­களும் குறித்த காலத்­தில் கிடைத்­துக் கொண்டே இருக்­கும்.

குற்­றச்­செ­யல்­க­ளுக்கு எதி­ரான ஆலோ­ச­னை­கள், பல நட­வ­டிக்­கை­களில், பயிற்­சி­களில், பயி­ல­ரங்­கு­களில் கலந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் பற்­றிய தக­வல்­கள் எல்­லாம் அவர்­க­ளுக்கு கிடைக்­கும்.

காவல்­து­றை­யி­டம் இருந்து தக­வல்­க­ளைப் பகிர்ந்து கொள்­ளும்­படி பொது­மக்­கள் வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறார்­கள். அதே­வே­ளை­யில், பொது­மக்­கள் குற்­றச்­செ­யல் தொடர்­பான தக­வல்­களை அதி­கா­ரி­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளும்­படி ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்று காவல்­துறை தெரி­வித்து உள்­ளது.

புதிய திட்­டத்­தில் இப்­போது தொண்­டூ­ழி­யர்­கள் சேர்­வ­தற்கு ஆறு குழு­மங்­கள் இருக்­கின்­றன.

அவை அன்­றாட வாழ்க்­கை­யின் பரந்த ஐந்து அம்­சங்­களை மைய­மா­கக் கொண்­டவை. வீடு, வேலை/கற்பது, போக்­கு­வ­ரத்து, வாழ்க்கைப் பாணி, இணை­யம் ஆகி­யவை அந்த ஐந்து அம்­சங்­கள்.

இந்­தத் திட்ட உறுப்­பி­னர்­கள் மேலும் செயல்­பட விரும்பினால் 'சுற்­றுக்­கா­வ­லில் குடி­மக்­கள்' அல்­லது 'தொண்­டூ­ழிய சிறப்புக் காவ­லர்­கள்' போன்ற இதர திட்­டங்­களில் அவர்கள் சேர்ந்­து­கொள்­ள­லாம்.

மேலும் தக­வ­லுக்கு அல்­லது தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேர்­வ­தற்கு police.gov.sg/volunteer என்ற இணை­யத்தளத்­துக்­குச் செல்­ல­லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்­டம் தொடங்­கி­யதை அடுத்து பிர­காஷ் குல­சே­கர், 55, என்ற தொண்­டூ­ழி­யர் தொண்­டூ­ழியத் திட்­டம் தொடர்­பான தன்­னு­டைய அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

அங் மோ கியோ தெற்கு அக்கம் பக்க காவல் நிலையத்துடன் கூடிய 'சுற்­றுக்­கா­வ­லில் குடி­மக்­கள்' என்ற திட்­டத்­தில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேவை­யாற்­றும் இவர், சில இளை­ஞர்­கள் சரி­யான பாதைக்­குத் திரும்ப தான் உத­வி­யது எப்­படி என்­பதைப் பகிர்ந்­து­கொண்­டார்.

காவல் துறை­யு­டன் சேர்ந்து தொடர்ந்து தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட தான் ஆர்­வ­மாக இருப்­ப­தா­க­வும் திரு பிர­காஷ் குல­சே­கர் குறிப்­பிட்­டார்.