வேலை பெற ரொட்டி தேர்ச்சி

வேலை பெற ரொட்டி தேர்ச்சி

1 mins read
a61fcc00-f4ad-4adb-b43e-8b7c50ed8060
-

தை ஹுவா குவான் பான் உடற்­கு­றை­யா­ளர் விடு­தி­யைச் சேர்ந்த 25 பேர் ரொட்டி தயா­ரிப்­பது எப்படி என்­ப­தைக் கற்று வரு­கி­றார்­கள்.

'அன்பு கலந்த ரொட்டி' என்ற அந்­தச் செயல்­திட்­டத்­தின் மூலம் தயா­ரிக்­கப்­படும் ரொட்­டி­கள் பொது­மக்­க­ளுக்­கும் விற்­கப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் எதிர்­கால வேலை வாய்ப்­பு­களும் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கிறது.

இப்­போது அவர்­கள் தயா­ரிக்­கும் ரொட்­டி­கள், 'தை ஹுவா குவான் தார்­மீக அற­நி­று­வ­னம்' என்ற அமைப்பு நடத்­தும் மூன்று விடு­தி­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கின்­றன. இந்த அற­நி­று­வ­னத்­தின் 10வது ஆண்டு விழா நேற்று நடந்­தது. சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, அதன் ஒரு பகு­தி­யாக ரொட்டி பயிற்சி செயல்­திட்­டத்­தைத் தொடங்­கி­வைத்­தார்.

இந்த அற­நி­று­வ­னம், அடுத்த ஆண்டு ஜன­வரி நடுப்­ப­கு­தி­யில் குறைந்த வரு­வாய்க் குடும்­பங்­க­ளுக்கு மளி­கைப்­பொ­ருள் பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொடுக்க உள்­ளது. அதற்­காக அற­நி­று­வ­னம் $100,000 நிதி திரட்­டு­கிறது.

பொது­மக்­கள் அடுத்த மாதம் 1ஆம் தேதி வாக்­கில் பெரு­நடை, சைக்­கி­ளோட்­டம், ஓட்­டம் மூலம் மொத்­த­மாக 10,000 கிலோ மீட்­டர் தொலை­வைக் கடந்து இந்த அறப்­ப­ணி­யில் உத­வ­லாம்.

இந்­தத் தொலைவு இலக்கு நிறை­வே­றி­னால் அற­நி­று­வ­னம் $100,000 பணம் கொடுக்­கும். டிசம்­பர் 1ஆம் தேதி இந்த இயக்­கம் தொடங்­கி­யது. பொது­மக்­கள் Giving.sg என்ற இணை­யத்­த­ளம் மூலம் ரொக்க நன்­கொடை தந்­தும் உத­வ­லாம்.