சிங்கப்பூரின் முன்னாள் அரசியல் தலைவர்கள் பற்றிய நூல்களுக்கு விருது

சிங்கப்பூரின் முன்னாள் அரசியல் தலைவர்கள் பற்றிய நூல்களுக்கு விருது

1 mins read
ad5471e8-2e30-406c-a995-b61006f69d13
-
multi-img1 of 2

வாச­கர்­க­ளின் பிர­ப­லத் தெரி­வு­கள் விரு­து­க­ளின் பெரி­ய­வர்­க­ளுக்­கான ஆங்­கில நூல்­கள் பிரி­வில் சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் அர­சி­யல் தலை­வர்­கள் புனைந்த நூல்­கள் உய­ரிய விரு­து­க­ளைத் தட்­டிச் சென்­றுள்­ளன.

அர­சி­யல் தலை­வர்­க­ளின் நேரடி அனு­ப­வங்­கள், பொது­மக்­கள் முன் நிக­ழா­தவை போன்ற அம்­சங்­கள் அந்த நூல்­களில் இடம்­பெ­று­

கின்­றன. பெரி­ய­வர்­க­ளுக்­கான ஆங்­கில நூல்­கள் பிரி­வில் சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் பிர­த­மர் கோ சோக் டோங் பற்­றிய நூல் முதல் பரிசை வென்­றது.

ஸ்டேன்­டிங் டால்: தி கோ சோக் டோங் யெர்ஸ் எனும் அந்த நூலைக் கதா­சி­ரி­ய­ரும் முன்­னாள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­

யா­ளரு­மான பே ஷின் ஹுவே­யும் ஓய்வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங்­கும் எழு­தி­னர்.

முன்­னாள் துணைப் பிர­த­மர் பேரா­சி­ரி­யர் எஸ். ஜய­கு­மார் பற்­றிய நூல் இரண்­டாம் இடத்­தைப் பிடித்­தது.

கவர்­னிங்: எ சிங்­கப்­பூர் பெர்ஸ்­பெக்­டிவ் எனும் தலைப்பு கொண்ட அந்த நூலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் பிர­சு­ரித்­தது.

மெய்­நி­கர் பரி­ச­ளிப்பு விழா­வில் வெற்றி பெற்ற நூல்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

பரிசளிப்பு விழாவில் பேராசிரியர் ஜயகுமாரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றபோதிலும் விருது வழங்கப்பட்டதற்தாக அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விருது வென்ற நூல்கள்.

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்