'முழு நிலவரங்களும் தெரியாத நிலையில் குழு முடிவு எடுத்தது'

'முழு நிலவரங்களும் தெரியாத நிலையில் குழு முடிவு எடுத்தது'

2 mins read
ca59dccd-7a3e-4c6b-98fe-7342ffb252e7
-

பாட்­டா­ளிக் கட்­சி­யின் செங்­காங் குழுத்­தொ­குதி முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பொய் சொன்­னார்.

அதனை அடுத்து திரு­வாட்டி கான் அவ­ராக விலகவில்லை எனில் அவ­ரைக் கட்­சி­யில் இருந்து நீக்­கு­வ­தற்கு ஆத­ர­வாக கட்­சி­யின் மத்­திய செயற்­குழு வாக்­க­ளித்­தது.

மன்­றத்­தில் திரு­வாட்டி கான் சொன்ன பொய் தொடர்­பான முழு நில­வ­ரங்­களும் தெரி­யாத நிலை­யில் இந்த முடிவை மத்­திய செயற்­குழு எடுத்­தது என்று நாடாளு­மன்ற உரி­மைக் குழு சனிக்­கி­ழமை வெளி­யிட்ட இரண்­டா­வது சிறப்பு அறிக்கை தெரி­விக்­கிறது.

பாட்­டா­ளிக் கட்­சித் தலை­மைச் செய­லா­ள­ரும் நாடா­ளு­மன்ற எதர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான பிரித்­தம் சிங், கட்­சித் தலைவி சில்­வியா லிம், துணைத் தலை­வர் ஃபைசல் மானாப் ஆகி­யோ­ரி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தான் பொய் சொன்­ன­தாக, ஆகஸ்ட் 8ஆம் தேதி திரு­வாட்டி கான் கூறி இருந்­த­தும் அதில் உள்­ள­டங்­கும் என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, நாடா­ளு­மன்­றத்­தில் திரு­வாட்டி கான் சொன்ன பொய்யை அப்­ப­டியே தொட­ரும்­படி அவரை தானும் பாட்­டா­ளிக் கட்­சி­யின் இதர தலை­வர்­களும் ஒரு­போ­தும் கேட்­டுக்­கொண்­டது கிடையாது என்று கட்­சி­யின் துணைத் தலை­வர் ஃபைசல் மானாப் நாடா­ளு­மன்­றக் குழு­ விடம் சாட்­சி­யம் அளித்­தார்.

தான் பொய் சொல்லி இருப்­ப­தாக திரு­வாட்டி கான் தங்­க­ளி­டம் கூறி­ய­போது அதன் தொடர்­பில் தாங்­கள் செயல்­ப­டா­தது ஏன் என்­ப­தைப் புரிந்­து­கொள்­வது சிரம மானது என்று அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இருந்­தா­லும் திரு­வாட்டி கானின் பாலி­யல் கொடுமை பற்றி கேட்­ட­தும் தாங்­கள் திகைத்­துப் போய்­விட்­ட­தா­க­வும் அவ­ரின் நல்­வாழ்வே தங்­கள் அக்­க­றை­யாக இருந்­தது என்­றும் துணைத் தலை­வர் ஃபைசல் மானாப் வியா­ழக் கிழமை அளித்த சாட்­சி­யத்­தில் கூறி­னார். இந்த விவ­ரங்­களை இரண்­டா­வது சிறப்பு அறிக்கை தெரி­வித்­தது.