ஓமிக்ரானுக்குப் பிந்திய புதிய பயண விதிமுறைகள்

ஓமிக்ரானுக்குப் பிந்திய புதிய பயண விதிமுறைகள்

2 mins read
c2ef69ef-8331-4564-b0c7-f35769930eb8
-

ஓமிக்ரான் உருமாறிய கிருமியின் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர், பல்வேறு நாடுகளுடனான தனது தடுப்பூசி பயணத்தடங்களில் புதிய எல்லைக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது.

கடுமையாக்கப்பட்ட விதிமுறைகள், தடுப்பூசி போட்டுள்ள பயணிகளை இனி எப்படி பாதிக்கும்?

சிங்கப்பூருக்குச் செல்பவர்:

சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் பயணத்திற்கு முன்பு இரண்டு நாள்களுக்குள் அவரவர் நாடுகளில் பிசிஆர் அல்லது ஏஆர்டி சோதனைகளைச் செய்யவேண்டும். சிங்கப்பூரை அடைந்தவுடன் அவர்கள் பிசிஆர் நாசித்திரவ சோதனை செய்யவேண்டும். கூடுதலான புதிய விதிமுறை: புதிதாக இங்கு வருவோர் அன்றாடம் ஏழு நாட்களுக்கு ஏஆர்டி சோதனைகளைச் சுயமாகச் செய்யவேண்டும். மூன்றாவது நாளிலும் ஏழாவது நாளிலும் விரைவுப் பரிசோதனை மையத்தில் ஏஆர்டி சோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவுக்குச் செல்பவர்:

அபாயகரமான நாடுகளுக்கான பட்டியலிலிருந்து இந்தியா சிங்கப்பூரை நீக்கிவிட்டதால் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குச் செல்பவர்களுக்கு பிசிஆர் சோதனைகள் இல்லை. ஏழு நாள்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றவேண்டும். ஆனால் கூடுதலாக எந்தச் சோதனைகளும் தேவைப்படாது. உடல்நலத்தை 14 நாள்களுக்குக் கண்காணிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசியாவுக்குச் செல்பவர்:

பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக 48 மணி நேரத்திற்குள் சோதனையைச் செய்யவேண்டும். மலேசியாவை அடைந்த பின்னர் பயணிகள், இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது நாள்களில் சோதனை செய்யவேண்டும்.

அமெரிக்காவுக்குச் செல்பவர்:

கொவிட்-19 சோதனையை புறப்படுவதற்கு முன்னர் ஒரு நாளுக்கு முன் செய்யவேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவர்:

தரையிறங்கி 72 மணி நேரத்திற்குத் தனிமையில் இருக்கவேண்டும்.