எல்லா சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 100 வெள்ளி பற்றுச்சீட்டு

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் 100 வெள்ளி பற்றுச்சீட்டுகளைப் பெற்று, அவற்றைக்குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சுமார் 10,000 கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும்பயன்படுத்தலாம்..

மொத்தம் 130 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள இந்தப் பற்றுச்சீட்டுகள்ச் சமூக மேம்பாட்டு மன்றம் 1.3 மில்லியன் வீடுகளை குடும்பங்களுக்கு வழங்கவுள்ளது.

இந்தப் பற்றுச்சீட்டு விநியோகம் இன்று திங்கட்கிழமை தொடங்கியது. அவற்றை 2022 டிசம்பர் 31 வரை பயன்படுத்த முடியும். இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பெற விரும்பும் குடும்பத்தின் சார்பில் குடும்ப உறுப்பினர் ஒருவர் சிங்பாஸ் தேவைப்படும் இணையத்தள இணைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு மற்றோர் இணைப்பு அவரது கைப்பேசிக்கு அனுப்பப்படும்.

இந்த இணைப்பின் வழியாக குடும்ப உறுப்பினர்கள் 2 வெள்ளி, 5 வெள்ளி மற்றும் 10 வெள்ளி பற்றுச்சீட்டுகளைக் குறிப்பிட்ட கடைகளில் பயன்படுத்தலாம். பற்றுச்சீட்டுத் தொகைக்குரிய கியூஆர் குறியீடுகள் உள்ள கடைகளில் காண்பித்தால் அந்தக் கடைக்காரர், ‘ரிடீம்எஸ்ஜி’ செயலியைப் பயன்படுத்தி வருடுவார். காகிதப் பற்றுச்சீட்டுகளிலுள்ள கியூஆர் குறியீடுகளும் இவ்வாறு வருடப்படும்.

இந்தப் பற்றுச்சீட்டுகளின் மறுவிற்பனைக்கு அனுமதி இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!