மிஸ் யுனிவர்ஸ் எனும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் 34 ஆண்டு
களுக்குப் பிறகு சிங்கப்பூரைப்
பிரதிநிதிக்கும் அழகி முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று முதல் 16 இடங்களைப் பிடித்த அழகிகளில் ஒருவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பெருமை சிங்கப்பூர்
அழகியான 21 வயது நந்திதா
பன்னாவைச் சேரும்.
இவருக்கு முன்பு 1987ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றபோது சிங்கப்பூரின் மரியன் நிக்கோல் டியோ அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அதற்குப் பிறகு சிங்கப்பூர் அழகிகள் யாரும் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இஸ்ரேலில் நேற்று காலை நடைபெற்ற இவ்வாண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நந்திதா.
"கடந்த மாதம் 8ஆம் தேதியன்று நந்திதா தமது 21வது பிறந்த
நாளைக் கொண்டாடினார். எனவே போட்டியின் அரையிறுதி வரை சென்றது இரட்டிப்புக் கொண்டாட்டமாகும்.
"அவர் எப்போதும் திறந்த மனப்பான்மையுடன் இருப்பவர். புதிய அனுபவங்களைப் பெறுவதில் மிகுந்த முனைப்புடன் இருப்பார்," என்று மிஸ் சிங்கப்பூர் யுனிவர்ஸின் இயக்குநர் திருவாட்டி வேலரி லிம் தெரிவித்தார்.
ராஃபிள்ஸ் பெண்கள் உயர்
நிலைப்பள்ளியிலும் ராஃபிள்ஸ்
கல்விக் கழகத்திலும் பயின்ற
நந்திதா, தற்போது சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகம், வர்த்தகப் பகுப்பாய்வுப் பட்டக் கல்வி பயின்று வருகிறார். 1.76 மீட்டர் உயரமுள்ள நந்திதா, 2017ஆம் ஆண்டிலிருந்து விளம்பர அழகியாக இருந்து வருகிறார். உள்ளூர் அழகிப் போட்டியில் வாகை சூடிய பிறகு நந்திதா தமது நீண்ட கூந்தலை வெட்டி புது தோற்றத்துடன் பிரபஞ்ச
அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். நீண்ட கூந்தல் அவரது முக அழகை மறைப்பதாக மிஸ் யுனிவர்ஸ் சிங்கப்பூர் குழுவினர் அனைவரும் ஏகமனதாக முடிவுஎடுத்ததாக திருவாட்டி லிம் கூறினார். கூந்தலின் நீளத்தை அவர் குறைத்தால் அவரது அழகை மெருகூட்டும் என்று அனைவரும் கருதியதாக அவர் தெரிவித்தார். முதலில் தயங்கினாலும், பிறகு புதிய தோற்றத்தைப் பயன்படுத்தி தமது அழகை வெளிக் கொணரவும்
நம்பிக்கையுடன் செயல்படவும்
நந்திதா கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
"மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். எனது நீண்டநாள் அயராத உழைப்பு என்னை அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்து சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்," என்று போட்டியின் நேரடி ஒளிபரப்புக்கு முன்பு நந்திதா தமது இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
போட்டியின் தேசிய ஆடை
சுற்றில் சிங்கப்பூர் கொடியின் நிறங்களான சிவப்பு, வெள்ளை ஆகியவற்றைக் கொண்ட ஆடையுடன் நந்திதா அழகுச் சிலையாக வலம் வந்து பார்வையாளர் அனை
வரையும் மெய்மறக்கச் செய்தார்.
அந்த ஆடையை உள்ளூர் ஆடை வடிவமைப்பாளர் ஃபிரே
டெரிக் லீ வடிவமைத்தார்.
சிங்கப்பூரின் முக்கிய இடங்களும் முக்கிய நிகழ்வுகளைக் காட்டும் படங்களும் அந்த ஆடையில் நெய்யப்பட்டிருந்தது குறிப்
பிடத்தக்கது. அத்துடன் விருது பெற்ற உள்ளூர் ஓவியரான லீ ஸின் லீயின் ஓவியங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

