துல்லிய வேலைகளை செய்யக்கூடிய இயந்திர மனிதர்கள்

துல்லிய வேலைகளை செய்யக்கூடிய இயந்திர மனிதர்கள்

1 mins read
ea14489f-8e64-42f4-94c1-247a222e6de9
-

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதுவகை தொழில்நுட்பத்தின் உதவியோடு கைகளால் மிகவும் துல்லியமாகக் கையாளப்படும் மிகச் சிறிய பொருள்களையும் மனித இயந்திரங்களால் இனி கையாள முடியும்.

இதற்கு முன்பு ஊழியர்கள் மட்டுமே இத்தகைய வேலைகளைச் செய்யலாம் என்ற நிலை இருந்தது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (என்டியு) சேர்ந்த யுரேக்கா ரொபோட்டிக்ஸ் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

டொயோட்டா குழுமத்தின் ஒரு பகுதியான டென்சோ வேவ் தொழில்நுட்ப நிறுவனம் விற்பனை செய்யும் தொழில்துறை மனித இயந்திரங்களுக்குத் தேவையான மென்பொருளில் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

சலிப்பைத் தரக்கூடிய, தொடர்ந்து பலமுறை செய்ய வேண்டிய பணிகளை இனி ஊழியர்கள் செய்யத் தேவையில்லாத நிலை ஏற்படலாம். அதே சமயத்தில் செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடனான இயந்திர மனிதர்கள் அந்தப் பணிகளைத் துல்லியமாகச் செய்யலாம்.

இதன்மூலம் ஊழியர்களால் ஏற்படும் பிழைகளையும் தவிர்க்க முடியும் என்று என்டியு, டென்டோ, யுரேக்கா ரொபாட்டிக்ஸ் கூறின.