வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரில் பசுமைத் திட்டத்துக்கு உட்பட்ட பல வேலைகளை வேளாண்-தொழில்நுட்பத் துறை உருவாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் புதிய மாற்று புரதச்சத்துப் பாடத்திட்டங்களை வழங்க உள்ளூர் பல்கலைக்கழகங்கள் தொடங்கி
உள்ளன.
போதிய வேளாண்-தொழில்
நுட்பத் திறனாளர்கள் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மாற்று புரதச்சத்து பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப் பாடத்திட்டம் பல்வேறு மாற்று புரதச்சுற்று தொடர்பில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. உதாரணத்துக்கு, விலங்குகளைக் கொல்லாமல் உணவுக்காக எவ்வாறு இறைச்சி வகைகளைத் தயாரிப்பது போன்று ஆராயப்படும்.
இதைப் போன்ற பாடத்திட்டத்தை கடந்த ஜூன் மாதத்தில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனது பட்டக் கல்வி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
தி குட் ஃபூட் பயிற்சிக் கழகம் எனும் அனைத்துலக லாபநோக்கமற்ற அமைப்புடன் இணைந்து இந்த மாற்று புரதச்சத்துப் பாடத்தை இவ்விரு பல்கலைக்கழகங்களும் உருவாக்கியுள்ளன. தாவரங்களிலிருந்து பெறப்படும் புரதச்சத்து, விலங்குகளின் உயிரணுக்களை நேரடியாக இணைத்து இறைச்சி வகைகளைத் தயாரிப்பது போன்ற மாற்று புரதச்சத்துகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதே பாடத்திட்டங்களின் இலக்கு.
அதற்குத் தேவையான தொழில்நுட்பமும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
தாவரங்களிலிருந்து பெறப்படும் புரதச்சத்து என்று கூறும்போது 'இம்பாசிபள் பெட்டிஸ்' போன்ற உணவுப்பொருட்களைக் குறிப்ப தாகும். இத்தகைய உணவுப்
பொருட்கள் முழுக்க முழுக்க தாவரங்களிலிருந்து தயாரிக்கப்
படுகின்றன. தற்போது மாற்று
புரதச்சத்துத் துறையில் திறனாளர் பற்றாக்குறை நிலவுவதாக தி குட் ஃபூட் பயிற்சிக் கழகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தற்காலிக நிர்வாக இயக்குநர் திருவாட்டி மெர்ட்டே கோஸ்கர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் அறிவியல், தொழில்நுட்பத் துறை பட்டக் கல்வி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்துக்கான வகுப்பில் அதிகபட்சம் 60 மாணவர்கள் இருப்பர் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தலைவர் பேராசிரியர் சோ வெய்பியாவ் கூறினார்.

