சிங்கப்பூருக்கு இலக்கு வைக்கும் கணினி ஊடுருவல் கும்பல்

சிங்கப்பூருக்கு இலக்கு வைக்கும் கணினி ஊடுருவல் கும்பல்

2 mins read
b56dc4a1-7cf5-49be-831a-b72a8d5aed23
-

கணினி ஊடு­ரு­விகளின் பார்வை சிங்­கப்­பூர் பக்­கம் திரும்பி வரு­கிறது.

குறிப்­பாக, கணி­னியை முற்­றி­லும் செய­லி­ழக்­கச் செய்தோ அல்­லது தர­வு­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யா­த­வாறு முடக்­கியோ பணம் பறிக்­கும் இணை­யத் தாக்­கு­தல்­கா­ரர்­கள் மற்ற நாடு­க­ளை­விட சிங்­கப்­பூரை இலக்­கா­கக் கொண்டு செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

ஊடு­ருவிகள் தாக்­கும் உலக நாடு­க­ளின் பட்­டி­ய­லில் 2019ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் சிங்­கப்­பூர் 44வது இடத்­தில் இருந்­தது. ஆனால் கடந்த ஆண்­டின் முதல் பாதி­யில் 21வது இடத்­துக்கு சிங்­கப்­பூர் நகர்ந்து உள்­ளது. இவ்­வாண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை­யில் சிங்­கப்­பூர் 11வது இடத்­தைப் பிடித்­துள்­ளது என்று இணை­யப் பாது­காப்பு நிறு­வ­ன­மான டிரெண்ட் மைக்ரோ கூறி­யது.

'ரான்­சம்­வேர்' என்று அழைக்­கப் படும் கணினி ஊடு­ருவில்கள் கணினி கட்­ட­மைப்பு அல்­லது தரவு களைப் பயன்­ப­டுத்த முடி­யா­மல் சிறிய மென்­பொ­ருள் மூலம் முடக்­கி­வி­டு­கின்­ற­னர். இவற்றை மீண்­டும் பழைய நிலைக்­குக் கொண்டு வர அவர்­கள் ஏரா­ள­மாக பணம் கேட்­கின்­ற­னர்.

இவர்­க­ளு­டைய தாக்­கு­த­லால் பாதிக்­கப்­படும் நாடு­க­ளின் வரி­சை­யில் சிங்­கப்­பூர் புதிய உச்­சத்தை நோக்கி இடம்­பி­டித்து வரு­வதை டிரெண்ட் மைக்ரோ நிறு­வ­னம் சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.

உல­கின் பல பெரிய நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­வ­தால் மோசடி கும்­ப­லின் இலக்கு சிங்­கப்­பூரை நோக்கி திரும்­பி­யி­ருக்­க­லாம் என்று நம்­பப் படு­கிறது.

பிரிட்­ட­னும் இதில் விதி­வி­லக்­கல்ல. அந்­நா­டும் 21லிருந்து 20க்கும் பின்­னர் 4வது இடத்­துக்கு வந்­துள்­ளது. ஆனால் சில நாடு­கள் பட்­டி­ய­லில் கீழ் இறங்­கி­யுள்­ளன.

உதா­ர­ண­மாக, 2019ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 2வது இடத்­தில் இருந்த பிரே­சில் ஒரு வரு­டத்­திற்­குப் பிறகு 12வது இடத்­துக்­குச் சரிந்து இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் 14வது இடத்­துக்கு முன்­னே­றி­யது.

மலே­சியா, 27வது இடத்­தி­லி­ருந்து 18வது இடத்­துக்கு முன்­னேறி பின்­னர் 28வது இடத்­துக்கு இறங்­கி­யது.

உல­கம் முழு­வ­தும் பணம் பறிக்­கும் ஊடு­ரு­வல் சம்­ப­வங்­களும் இதே காலக்­கட்­டத்­தில் 36,728ல் இருந்து 43,481க்கும் பின்­னர் 69,603க்கும் அதி­க­ரித்­துள்­ளன.

இணை­யத் தாக்­கு­தல்­கா­ரர்­கள் சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளுக்கு தங்­க­ளு­டைய இலக்­கு­களை மாற்றக்­ கூ­டும் என்று கூறிய டிரெண்ட் மைக்­ரோ­வின் ஆசிய பசி­பிக் வட்­டார மிரட்­டல் குறித்த ஆய்­வுப் பிரி­வின் மூத்த நிர்­வா­கி­யான ரையான் ஃபுளோரஸ், பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் உட்­பட பல பெரிய நிறு­வ­னங்­களும் அலு­வ­ல­கங்­களும் இங்கு செயல்­ப­டு­வதே அதற்கு கார­ணம் என்­றார்.

"கணினி ஊடு­ருவில்கள் தேர்ந்­தெ­டுத்து செயல்­ப­டு­கின்­ற­னர். சிறிய நிறு­வ­னங்­க­ளுக்கு அவர்­கள் குறி வைத்­த­னர். தற்­போது நடுத்­தர அல்­லது அதற்­கும் மேலான பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு அவர்­கள் இலக்கு வைக்­கின்­ற­னர்," என்று அவர் மேலும் கூறி­னார்.

தற்­போ­தைய சூழ­லில் பல நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாகி வரு­வது கணினி ஊடு­ரு­வல்­கா­ரர்­க­ளுக்கு மேலும் வச­தி­யா­கி­விட்­டது என்­றார் அவர்.