ஊழியர் தங்குவிடுதியில் பாது காவல் அதிகாரியாக பணியாற்றும் ஆல்வின் லியோங் ஜித் லூங், மருத்துவ விடுப்பில் இருந்தபோது வெளியே சென்றதால் அவருக்கு 24 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருமல், காய்ச்சல், உடல்வலி, தொண்டை எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்து வரைப் பார்த்தார். அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டு கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது. சோதனை முடிவு தெரியும் வரை வெளியே செல்லாமல் வீட்டில் தங்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இரண்டு நாள்களி லேயே அதை மீறி வெளியே சென்ற அவர் பாதுகாவல் மேற்பார்வையாளருக்கான வகுப்பில் கலந்துகொண்டார். சிங்கப்பூரரான 46 வயது லியோங்குக்கு பின்னர் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் கிருமிப் பரவல் சூழ்நிலையில் அவர் வெளியே சென்றதற்காக நேற்று 24 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

