சிங்கப்பூரர் பெயரில் தரை வீடு வாங்க முயற்சி; சீனாவைச் சேர்ந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரர் பெயரில் தரை வீடு வாங்க முயற்சி; சீனாவைச் சேர்ந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

3 mins read
fd5e1e59-d115-46c0-9f7a-ac3028390bd6
-

சிங்­கப்­பூ­ரில் தனக்­குப் பதி­லாக தரை வீட்டை வாங்­கு­வ­தற்­காக சிங்­கப்­பூ­ரர் ஒரு­வரை நிய­மித்த குற்­றச்­சாட்­டுக்கு ஆளாகி இருக்­கி­றார் 39 வயது சீன நாட்­டைச் சேர்ந்த சென் ஸியோபு.

வெளி­நாட்­ட­வ­ரான அவர் சிங்­கப்­பூ­ரில் தரை வீடு போன்­ற­வற்றை வாங்க அர­சாங்க அனு­மதி பெற வேண்­டும்.

ஆனால் 2014ல் அங் மோ கியோ­வில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வட்­டா­ரத் தில் உள்ள எண் 220 பெல்­கி­ரே­வியா பங்­ளாவை சிங்­கப்­பூ­ர­ரான சோங் ஃபன்­ரோங், 49 மூலம் அவர் வாங்க முயற்சி செய்­த­தா­கக் கூறப் படு­கிறது.

அவர் மீது குடி­யி­ருப்பு சொத்­துச் சட்­டத்­தின் கீழ் குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­கா­ரத்­தில் தொடர்­பு­டைய 49 வயது சோங் ஃப்ரோங் என்ற மாதும் இதேபோன்ற மூன்று குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

வெளி­நாட்­ட­வ­ராக இருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரில் சொந்­தப் பெய­ரில் வீடு வாங்க முடி­யாது என்று சோங் சென்­னி­டம் கூறி­ய­தாக வர்த்­தக விவ­கா­ரப் பிரி­வின் விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது என்று காவல்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

தனது பெய­ரில் வீடு வாங்கி பின்­னர் நிரந்­த­ர­வாசி அல்­லது சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற்ற பிறகு மாற்­றிக் கொள்­ள­லாம் என்று சென்­னுக்கு சோங் ஆலோ­சனை வழங்­கி­ய­தாக தெரி­கிறது.

இதை ஏற்­றுக் கொண்டு வீடு வாங்க ஒரு பகுதி பணத்தை சோங்­குக்கு கொடுத்­தாக சென் கூறி­யுள்­ளார். இதை­ய­டுத்து சோங் வீட்டை வாங்­கு­வ­தற்­கான ஏற்­பாடு களை செய்­தார்.

கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வட்­டா­ரங்­களில் தரை வீடு, பங்களா போன்ற வீடு­களை வாங்க விரும்­பும் வெளி­நாட்­ட­வர்­கள் அர­சாங்­கத்­தின் அனு­மதி பெற வேண்­டும் என்ற சிங்கப் பூர் நில ஆணை­யத்­தின் இணை­யப் பக்­கம் தெரி­விக்­கிறது.

வீட்டை வாங்­கு­ப­வர் குறைந்­தது ஐந்து ஆண்­டு­கள் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யாக இருக்க வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லுக்கு குறிப்­பி­டத்­தக்க பங்­காற்­றி­யி­ருக்க வேண்­டும் என்­றும் ஆணை­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

சோங் தனக்­குள்ள தொடர்பு மூலம் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி அல்­லது குடி­யு­ரிமை பெற உதவி செய்­வ­தாக தங்­களை தவ­றாக வழி­ந­டத்­தி­ய­தாக சென்­னும் வாங் செங், லியு குவோ­ஹுய் ஆகிய இரு­வ­ரும் சோங் மீது உயர் நீதி­மன்­றத்­தில் கடந்த மார்ச் மாதம் வழக்­குத் தொடுத்­த­னர்.

சென், வாங் மற்­றும் லியு ஆகிய மூவ­ரும் நண்­பர்­கள். சொத்து மூலம் பல மில்­லி­யன் பணத்­தைச் சேர்த்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே பாசிர் பஞ்­சாங், ரோச்­சஸ்­டர் டிரைவ் உள்­ளிட்ட இடங்­களில் 'பட்­டர்­கப்ஸ்' என்ற பெய­ரில் எட்டு மழ­லை­யர் பள்­ளி ­க­ளை­யும் உட்­லண்ட்ஸ், காலாங்­கில் பாலர் பள்­ளி­க­ளை­யும் சோங் நடத்தி வந்­தார். சிங்­கப்­பூ­ரில் குடி­யேற ஒரு நிறு­வ­னத்­தில் 500,000 வெள்ளி முத­லீடு செய்ய வேண்­டும் என்ற திட்­டத்­தின் கீழ் உதவி செய்­வ­தா­கக் கூறி­ய­தால் சோங்­கு­டன் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­தாக மூவ­ரும் கூறி­னர்.

ஆனால் உண்­மை­யில் குறைந்­த­பட்­சம் 50,000 வெள்ளி முத­லீடு மட்­டுமே தேவை என்­பதை பின்­னர் மூவ­ரும் உணர்ந்­து­கொண்­ட­னர்.

நேற்று நீதி­மன்­றத்­தில் பேசிய சென்­னின் வழக்­க­றி­ஞர் தனது கட்­சிக்­கா­ரர் மோச­டி­யால் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் வழக்­குக்கு முந்­தைய கலந்­து­ரை­யா­டல் மூலம் பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக்­கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

இல்­லை­யென்­றால் சென் தன் மீதான குற்­றச்­சாட்டை ஒப்­புக் கொள்ள மாட்­டார் என எதிர்பார்க்கப் ­ப­டு­வதாக மாலையில் வெளியாகும் சீன நாளேடு குறிப்பிட்டது.