குழந்தைகளுக்கான ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி தடுப்பூசி திட்டமிட்டபடி சிங்கப்பூரை வந்தடைந்தால், ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான 300,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்தத் தடுப்பூசிக்கு அடுத்த வாரம் முதல் படிப்படியாக முன்
பதிவு செய்துகொள்ளலாம்.
தொடக்கநிலை 3 முதல் 5 வயரை பயிலும் மூத்த குழந்தை
களுக்கு டிசம்பர் மாத இறுதி முதல் தடுப்பூசி போடப்படும். அவர்களை விட இளையவர்
களுக்கு 2022 தொடக்கப் பகுதியில் தடுப்பூசி போடும் நட
வடிக்கை தொடங்கும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
"நமது குழந்தைகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அதிகமான கற்றல் நடவடிக்கைகளையும் விளையாட்டு நடவடிக்கைகளையும் நம்மால் மீண்டும் தொடங்க முடியும். இவ்விரண்டும் நமது குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவை," என்றார் திரு சான்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி வந்தடையும் தேதியை உறுதி செய்ய அதிகாரிகள் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஃைபசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை அனுமதித்திருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த, சிங்கப்பூரில் நீண்டகால அனுமதி அட்டை ைவத்திருப்போருக்கும் தடுப்பூசி போடப்படும்.
குழந்தைகள் எதிர்நோக்கும் அபாயத்திலிருந்து அவர்களைக் காக்கும் நன்மைகளை தடுப்பூசி பெற்றிருப்பதாக கொவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழு தெரிவித்திருந்தது.
மிகச் சிறிய அளவிலான மருந்து மட்டுமே தடுப்பூசி மூலம் இந்த வயதுப் பிரிவு குழந்தைகளுக்குச் செலுத்தப்படும். அதாவது, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி மருந்தின் மூன்றில் ஒரு பகுதி அளவிலேயே அது இருக்கும். இரண்டாவது தடுப்பூசியை அவர்கள் குறைந்தபட்சம் 21 நாள்கள் கழித்துப் போட்டுக் கொள்ளலாம்.
இது ெதாடர்பாக சுகாதார அமைச்சுடனும் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு டனும் கல்வி அமைச்சு அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது.

