மலிவான, மீண்டும் மின்னேற்றக்கூடிய, மக்கும் தன்மை கொண்ட காகித மின்கலனை உள்ளூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு தயாரித்துள்ள இந்த மின்கலம் கணிசமான மின்சாரத்தைத் தேக்கி வைக்கும் ஆற்றல் கொண் டது. உதாரணமாக 4 செமீ அகலம் 4 செமீ உயரம் கொண்ட அச்சிடப்பட்ட காகித மின்கலம் 0.4 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கும். ஆயினும் அந்த மின்கலத்தால் மின்விசிறி ஒன்றை குறைந்தபட்சம்
45 நிமிடங்களுக்கு இயக்க முடியும் என குழு தெரிவித்து உள்ளது.

