சுயபரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் 120க்கு உயரும்

சுயபரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் 120க்கு உயரும்

2 mins read
86caf427-0f15-48d3-b2d9-090f22a9d361
-

கண்­கா­ணிப்­பின்­கீழ் சுய­மாக ஆன்­டி­ஜென் விரை­வுப் பரி­சோ­தனை (ஏஆர்டி) செய்­து­கொள்ள வேண்­டிய நிலை­யில் உள்­ள­வர்­கள் அடுத்த வாரம் முதல் அதனை எளி­மை­யாக மேற்­கொள்­ள­லாம். சிங்­கப்­பூர் திரும்­பும் பய­ணி­க­ளுக்­கும் சில துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கும் இது உதவியாக இருக்கும்.

தீவு முழு­வ­தும் குறிப்­பிட்ட சில இடங்­களில் விரை­வுப் பரி­சோ­தனை நிலையங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக தனி­யார் மருத்­து­வர்­கள், கடைத்­தொ­கு­தி­களை நடத்து­ வோர் ஆகி­யோ­ரு­டன் ஹோட்­டல் குழு­மங்­க­ளு­ட­னும் சுகா­தார அமைச்சு பங்­கா­ளித்­து­வம் செய்­து­ கொண்டுள்­ளது.

அதன் பய­னாக 'அடுத்த சில வாரங்­களில்' கூடு­த­லாக 60 நிைலயங்­கள் உரு­வா­கும் என அமைச்சு எதிர்­பார்க்­கிறது.

அத­னைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரின் விரை­வுப் பரி­சோ­தனை நிலையங்­க­ளின் எண்­ணிக்கை 120 என இரு­ம­டங்­கா­கி­வி­டும்.

கேப்­பிட்­ட­லேண்ட் மற்­றும் ஃபிரேசர்ஸ் போன்ற கடைத்­

தொ­கு­தி­கள், ஃபார் ஈஸ்ட் ஹாஸ்­பிட்­ட­லிட்டி குரூப், இண்­டர்­காண்­டினெண்­ டல் ஹோட்­டல் குரூப், அக்­கார் ஹோட்­டல்ஸ், ரிசோர்ட்ஸ் ேவார்ல்ட் செந்­தோசா போன்­ற­வற்­றின் சொத்­து­களில் அமை­ய­வி­ருக்­கும் நிைலயங்க­ளை­யும் மொத்த எண்­ணிக்கை உள்­ள­டக்­கும்.

தற்­போது கிட்­டத்­தட்ட 60 விரை­வுப் பரி­சோ­தனை நிலையங்­கள் உள்­ளன. பயிற்­சி­பெற்ற பணி­யா­ளர்­க­ளின் கண்­கா­ணிப்­பின்­கீழ் பொது­மக்­கள் இங்கு சுய­மா­கப் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம்.

அதற்கு முன்­ப­திவு தேவை. இந்த நிலையங்­களில் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தால் அல்­லது தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­டன் பங்­கா­ளித்­து­வம் ஏற்­ப­டுத்­திய அதி­கா­ரி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை.

இந்த நிலையங்­களில் மேற்­கொள்­ளப்­படும் ஒவ்­வொரு பரி­சோ­த­னைக்­கும் $15 கட்­ட­ணம். வேலை­யி­டங்­களில் வழக்­க­மா­கப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டிய நிலை­யில் உள்­ள­வர்­கள், நிகழ்ச்­சி­க­ளுக்கு முன் பரி­சோ­தனை செய்­து­ கொள்­வோர் உள்­ளிட்­டோர் இத­னைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தற்கு முன்­னர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள விரும்­பு­வோ­ரும் இந்நிலையங்­களில் முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம்.