செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b1d79fe8-a224-4b75-9a4a-02476598ae46
-

மொடர்னா பூஸ்டருக்கு முன்பதிவு தேவையில்லை என அறிவிப்பு

மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதியுடையோர் அதற்காக முன்பதிவு செய்யத் தேவை இல்லை. அவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாகச் செல்லலாம் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரி வித்துள்ளார். இந்த டிசம்பர் மாதத்தில் அதிகமான மொடர்னா பூஸ்டர் தடுப்பூசிகள் ைகயிருப்பு இருப்பதாகவும் அவர் நேற்று கூறினார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உடல்நிலை கண்காணிப்புக்குக் காத்திருக்க வேண் டிய நேரம் 30 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட உள்ளது. "பூஸ்டர் தடுப்பூசி போட்ட பின்னர் கடுமையான எதிர்விளைவு ஏற்படும் சம்பவங்கள் ஆகக்குறைவாக இருப்பதை எங்களது தரவுகள் காட்டு கின்றன. நேரத்தைக் குறைப்பதன் மூலம் அதிகமானோ ருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடமுடியும்," என்று நேற்று கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங் விளக்கினார்.

"பூஸ்டர் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. அதிகம் பரவக்கூடிய ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக்கூடியது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொள்ளைநோய் சிரமத்தில் கைகொடுத்த செல்லப்பிராணிகள்

கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் தங்­க­ளது மன

­ந­லத்தை மேம்­ப­டுத்த செல்­லப்­பி­ரா­ணி­கள் உத­வி­ய­தாக ஆய்வு ஒன்­றில் பங்­கேற்­ற­வர்­களில் 89 விழுக்­காட்­டி­னர் கூறி­யுள்­ள­னர். 'போரிங்­கர் இங்­கெல்­ஹெய்ம் அனி­மல் ஹெல்த் சிங்­கப்­பூர்' என்­னும் அனைத்­து­லக விலங்­கு­நல நிறு­வ­னம் நடத்­திய இந்த ஆய்­வில் நாய், பூனை­களை வளர்க்­கும் 1,018 பேர் கலந்­து­கொண்­ட­னர். கடந்த அக்­டோ­பர் 8 முதல் அக்­டோ­பர் 27 வரை ஆய்வு நடத்­தப்­பட்­டது. ஆய்வு முடிவு குறித்து விளக்­கிய ஆய்வு நிறு­வ­னத்­தைச் சேர்ந்த டாக்­டர் அர்­மின் வீஸ்­லெர், கொள்­ளை­நோய் காலத்­தில் மனி­தர்­

க­ளுக்கு உடல், மனம் மற்­றும் உணர்வு ரீதி­யான ஆத­ரவை வழங்­கு­வ­தில் செல்­லப்­பி­ரா­ணி­கள் முக்­கிய பங்கு வகித்­த­

தா­கக் குறிப்­பிட்­டார். அந்தக் கால­கட்­டத்­தில் மனி­தர்­க­ளுக்­கும் வீட்­டில் வளர்க்­கப்­படும் விலங்­கு­க­ளுக்­கும் இடை­யி­லான நெருக்­கம் அதி­க­ரித்­த­தா­க­வும் அவர் கூறி­னார். ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் மூன்­றில் ஒரு­வர் கடந்த ஆண்டு கொள்­ளை­நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது அல்­லது அதற்­குப் பின்­னர் செல்­லப்­பி­ரா­ணி­களைத் தத்து எடுத்­த­தா­கக் கூறி­னர்.

விருது வழங்கி கௌரவம்

ஆஸ்திரேலிய புதர்த் தீயைச் சமாளித்த விதத்திற்காகவும் பயங்கரவாத முறியடிப்புச் செயல்களுக்காகவும் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 89 அதிகாரிகள் நேற்று வெளிநாட்டுப் பணிக்கான சேவை (ஓஎஸ்எம்) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களின் அர்ப்பணிப்புகளை அப்போது அவர் பாராட்டினார்.