ஒன்பது மாத நன்னடத்தைக் கண்காணிப்பில் இளைஞர்

பதின்ம வயது இளை­ஞர் ஒரு­வர் தனக்கு கொவிட்-19 கிருமி தொற்றிவிட்­ட­தா­க­வும் அதனை அடுத்து மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் தான் சேர்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் விளை யாட்­டுத்தன­மாக கடந்த மே மாதத்­தில் பொய்த் தக­வல் அனுப்­பி­னார்.

ஆனால் சியூ ஹான்­லோங் என்ற அந்த இளை­ஞர் (படம்) அனுப்­பிய அந்­தப் பொய்ச்செய்தி விப­ரீ­தத்­தில் முடிந்­து­விட்­டது. அவ­ரு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்த ஒரு­வர் தெக்­கோங்­ தீவில் தேசிய சேவை ஆற்­றிக்­கொண்டு இருந்­தார்.

அவர் உட­ன­டி­யாக வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டார். அங்கு தனி­மை­யில் இருக்­க­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. அவ­ரு­டன் தொடர்­பில் இருந்த ராணுவ வீரர்­களும் தங்களைத் தனி­மைப்­படுத்­திக்கொள்­ள­வேண்­டிய தேவை ஏற்­பட்­டது,

இத­னால் பயிற்சிக் கால அட்­ட­வணை பாதிக்­கப்­பட்­டது. சியூவுக்கு இப்­போது வயது 19. அவர் இரண்டு குற்­றச்­சாட்டுகளின் பேரில் சென்ற மாதம் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

அவர் ஒன்­பது மாத நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­பில் வைக்­கப்­பட்­டார். அதன்­படி அவர், அன்­றாடம் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டி­லேயே இருக்­க­வேண்­டும். 40 மணி நேரம் சமூ­கச் சேவை­யாற்­ற­ வேண்­டும்.

சியூ­வின் நன்னடத்­தையை அவரின் பெற்­றோர் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இல்லை எனில் அவர்கள் $5,000 தொகையை இழக்க நேரி­டும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!