வெளிநாடு ஒன்றுக்காக அமெரிக்காவை வேவு பார்த்த சிங்கப்பூரரான ஆடவர் ஒருவர் இங்கு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
டிக்சன் இயோ, 40, என்ற அவர், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். டிக்சன் இயோ 2019 நவம்பரில் அமெரிக்காவில் கைதானார். டிசம்பர் 30ஆம் தேதி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
பணம் வாங்கிக்கொண்டு ஒரு வெளிநாட்டிற்கான முகவராக செயல்பட்டதற்காக இந்த ஆண்டு ஜனவரியில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

