16 நாள் உள்ளூர் விடுப்பில் செல்லும் பிரதமர் லீ

16 நாள் உள்ளூர் விடுப்பில் செல்லும் பிரதமர் லீ

1 mins read
55722dc3-cb73-4dac-9870-fb0f38619ee8
பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

பிரதமர் லீ சியன் லூங், வியாழக்கிழமை (டிசம்பர் 16) தொடங்கி 16 நாள்களுக்கு உள்ளூர் விடுப்பில் செல்கிறார். பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

திரு லீ விடுப்பில் இருக்கும்போது அவர் தொடர்ந்து தொடர்பில் இருப்பார் என்பதால், இந்தக் காலகட்டத்தில் தற்காலிகப் பிரதமராக எவரும் நியமிக்கப்பட மாட்டார்.

கடைசியாக பிரதமர் லீ இவ்வாண்டு ஜூன் மாதத்திலும் கடந்த ஆண்டு டிசம்பரிலும் விடுப்பில் சென்றிருந்தார். அப்போதும் இதேபோன்ற ஏற்பாடுகள்தான் நடப்பில் இருந்தன.