பயணச்சீட்டு எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிப்பு

பயணச்சீட்டு எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிப்பு

2 mins read
f8e2d6e7-7938-4d30-952d-0aafd1391d1c
விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூர்-மலேசியா தரைவழி 'விடிஎல்' திட்டம், அடுத்த வாரம் நடப்புக்கு வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் இருந்து ஜோகூர் பாரு­வுக்­குச் செல்­வது அடுத்த வாரம் முதல் மேலும் எளி­மை­யாக்­கப்­படும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) பேருந்­துச் சேவை வழங்­கும் இரு நிறு­வ­னங்­களும் விற்­பனைக்கு விடும் பய­ணச்­சீட்­டு­களின் எண்­ணிக்­கையை 50 விழுக்­காடு அதி­க­ரிக்க முடி­யும் எனத் தெரி­வித்­துள்­ளன.

சிங்­கப்­பூர்-மலே­சியா தரை­வழி 'விடி­எல்' திட்­டம் டிசம்­பர் 20ஆம் தேதி முதல் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் அடுத்த வாரத்­தில் இருந்து கடற்­பா­லம் வழி­யாக மலே­சி­யா­வுக்­குச் செல்­ல­லாம் என்று சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக, தொழில் அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்து இருந்­தது. அதே­போல, இத்­திட்­டத்­தின்­கீழ் மலே­சி­யர்­களும் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம்.

தற்­போது தாங்­கள் செல்­ல­விருக்­கும் நாட்­டின் குடி­மக்­க­ளா­கவோ நிரந்­த­ர­வா­சி­க­ளா­கவோ நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­களா­கவோ இருப்­ப­வர்­கள் மட்­டுமே தரை­வழி 'விடி­எல்' திட்­டம் வழி­யாக இரு நாடு­க­ளுக்­கும் செல்­ல­லாம்.

ஜோகூர் பாரு­வில் உள்ள லார்­கின் சென்ட்­ர­லுக்­கும் சிங்­கப்­பூ­ரின் குவீன் ஸ்தி­ரீட்­டிற்­கும் இடையே ஒவ்­வொரு திசை­யி­லும் கூடு­த­லாக 10 பேருந்­து­க­ளை தான் இயக்­கப்­போ­வ­தாக பேருந்­துச் சேவை வழங்­கும் இரு நிறு­வ­னங்­களில் ஒன்­றான 'காஸ்வே லிங்க்' அறி­வித்­தது. இந்த அதி­க­ரிப்பு வரும் 20ஆம் தேதி­யில் இருந்து நடப்­புக்கு வரு­கிறது. தற்­போது, அன்­றா­டம் ஒவ்­வொரு திசை­யி­லும் 16 பேருந்­து­களை காஸ்வே லிங்க் இயக்­கு­கிறது.

நேற்­றுக் காலை 8 மணி­யில் இருந்து காஸ்வே லிங்க் நிறு­வ­னத்­தின் இணை­யப் பக்­கத்­தில் பய­ணச்­சீட்­டு­க­ளின் விற்­பனை தொடங்­கி­யது.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 'டிரான்ஸ்­டார்', விடி­எல் திட்­டத்­திற்­குப் பேருந்­துச் சேவை வழங்­கும் மற்­றொரு நிறு­வ­ன­மா­கும். டிசம்­பர் 20ஆம் தேதி­யில் இருந்து கூடு­தல் பேருந்­து­களை இயக்­க­வி­ருப்­ப­தாக அந்­நி­று­வ­ன­மும் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தது.

உட்­லண்ட்­சுக்­கும் லார்­கின் சென்ட்­ர­லுக்­கும் இடையே ஒவ்­வொரு திசை­யி­லும் தற்­போது 16 பேருந்­து­களை டிரான்ஸ்­டார் இயக்கி வரு­கிறது. அடுத்த வாரத்­தில் இருந்து, ஒவ்­வொரு திசை­யி­லும் கூடு­த­லாக எட்­டுப் பேருந்­து­களை அது இயக்­கும்.

கூடு­த­லான பய­ணச்­சீட்­டு­க­ளின் விற்­பனை நாளை தொடங்­கும் என்று கூறப்­பட்­டது.

நாளுக்கு 1,440 பய­ணச்­சீட்­டு­களை ஒவ்­வொரு பேருந்­துச் சேவை நிறு­வ­ன­மும் இத்­திட்­டத்­திற்­காக ஒதுக்கி இருக்க, தேவை அதி­கரித்­துள்­ள­தால் இனி மேலும் 720 பய­ணச்­சீட்­டு­கள் விற்­பனைக்கு வரு­கின்­றன.