'கொவிட்-19 தொற்றை குணப்படுத்தும் தேன்' - நிறுவனம் மீது விசாரணை

'கொவிட்-19 தொற்றை குணப்படுத்தும் தேன்' - நிறுவனம் மீது விசாரணை

1 mins read
8e3e4f99-86c7-4884-8326-72e9b068a130
தன்னுடைய தேன் கொவிட்-19 தொற்றைக் குணப்படுத்த வில்லை என்றால் பணத்தைத் திருப்பித் தருவதாக நிறுவனம் உறுதி கூறி உள்ளது. படம்: நேச்சுரல் ஒயில்டு ஹனி/ இன்ஸ்டகிராம் -

தாங்­கள் தயா­ரிக்­கும் தேன், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் குணப்­ப­டுத்­தும் என்று விளம்­ப­ரம் செய்­து­வ­ரும் தேன் விற்­பனை நிறு­வ­னம் ஒன்றை சிங்­கப்­பூர் உணவு முகவை விசா­ரித்து வரு­கிறது.

'நேச்­சு­ரல் ஒயில்டு ஹனி' என்ற அந்த நிறு­வ­னம், இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த தேனை விற்­ப­னை செய்து வரு­கிறது.

ஒரு­வர் தன் நிறு­வ­னத்­தின் 12 போத்­தல் தேனைச் சாப்­பிட்­டால் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றில் இருந்து 18 நாட்­க­ளி­லேயே குண­மடைந்­து­வி­ட­லாம் என்று அந்த நிறு­வ­னம் விளம்­ப­ரப்­ப­டுத்­து­கிறது.

அப்­படி குண­ம­டை­ய­வில்லை என்­றால் 12 போத்­தல் தேனுக்­கும் உரிய $800 தொகை­யைத் திருப்­பிக் கொடுக்­கத் தான் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அந்த நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இது பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்­ட­தற்­குப் பதி­ல­ளித்த உணவு முகவை, அந்த நிறு­வ­னம் இவ்­வாறு விளம்­ப­ரப்­ப­டுத்­தி­ய­தைத் தான் அறிந்­தி­ருப்­ப­தா­க­வும் இதன் தொடர்­பில் அந்­நி­று­வ­னம் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­யது.

இத­னி­டையே, அந்த நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான ரிச்­சர்ட் டியோ, 70, தனது நிறு­வ­னம் விளம்­ப­ரப்­படுத்­து­வது உண்மை என்று தெரி­வித்­தார்.

"நான் மக்­க­ளுக்கு உதவி செய்ய விரும்­பு­கி­றேன். இப்­படி விளம்­ப­ரப்­ப­டுத்­தக்கூடாது என்று சிங்­கப்­பூர் உணவு முகவை கூறு­வது நியா­ய­மல்ல. முகவை முத­லில் எனது தேனை கொவிட்-19 நோயாளி­க­ளி­டம் தந்து பரி­சோ­தித்­துப் பார்க்­க­வேண்­டும்," என்று திரு ரிச்­சர்ட் டியோ கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.